சென்னை, மே 12 புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண் டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்த விவரம் வருமாறு: திரு மணமான ஒருவர் என்றால் புதிய ரேஷன் கார்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தும் ரேஷன் அட்டையில் அவர்களுடைய பெயரை இணைக்க வேண்டும். அதே போல், குழந்தைகள் பிறந்தாலும் அவர் களுடைய பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும்.
அரசு தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றைப் பெற ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவண மாக உள்ளது. ரேஷன் கார்டு மட்டுமின்றி மற்ற ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் அய்டி கார்டு போன்ற கார்டுகளும் மிக மிக முக்கிய மான ஆவணங்களாக உள்ளன. எனவே இது போன்ற கார்டுகளை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் பெயர், முகவரி, கைப்பேசி எண் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் மற்றும் பிழை இல்லாமலும் இருக்க வேண்டும் என் பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
பிழைகள் மட்டுமின்றி புதிதாக திருமணமானவர் எனில், அவருடைய பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் மற்றும் குழந்தைகள் பிறந்திருந்தால் அவர்களுடைய பெயரும் இணைக்கப்பட வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை
சமீபத்தில் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும், மாத மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புதிய ரேஷன் அட்டைகளை பெறு வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
அது மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் கிடைப்பதற்கும் ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது. எனவே, இதில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் இணைக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக சரி செய்வது, அரசு தரும் திட்டங்களை எளிதாக பெற உங்களுக்கு உதவுகிறது.
புதிய ரேஷன் கார்டு
நீங்கள் புதிதாக திருமணமானவர் என்றால், ஏற்கனவே நீங்கள் பயன்படுத் திய அரசு பொருட்களை பெறும் ரேஷன் கார்டில் வீட்டிற்கு புதிதாக வந்தவரின் பெயரை இணைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இணைந்து புதிய ரேஷன் கார்டைப் பெறலாம். ஆனால் அதற்கு முன் அவர்களுடைய பெயரை ஏற்கெனவே பயன்படுத்திய ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதன் பிறகு தான் புதிய ரேஷன் கார்டைப் பெற முடியும். இதனை நீங்கள் இணையத்தில் எளிதாக செய்து முடிக்கலாம்.
ரேஷன் கார்டு பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமானவர், தங்களுடைய ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டும். அவ்வாறு முகவரியை அப்டேட் செய்த பின்னரே புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் என்றால் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது அவர்களுக்கும் ப்ளூ ஆதார் கார்டு உள்ளது. எனவே, அவர்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள், ஆதார் கார்டில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த, பின்னரே அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முடியும்.
ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் புதிய கார்டு விண்ணப்பிக்கும் முறை:
1.https://tnpds.gov.in/ என்ற அதி காரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
2. அதில் மின்னணு அட்டை தொடர் பான சேவைகளுக்கு கீழ் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து விண் ணப்பிக்கலாம்.
3. அதன் பின் உங்களு டையகைப்பேசி எண்ணை கொடுத்து பதிவு செய்து பிற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.