லக்னோ,மே 11– உத்தரப்பிரதேசத்தில் ராஜ்புத் சமூக மக்களைத் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்காமல், செல்வந்த நண்பர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வந்த பாஜக மீது நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே ராஜ்புத் சமூகம் தொடர்பான ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் சமூக மக்கள், பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள பற்பாங்கர் பகுதியைச் சேர்ந்த தாழ்த் தப்பட்ட சமூக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி, அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அரசியல் சாசனத்தை திருத்த எதிர்ப்புத் தெரிவித்தும், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீதான பாஜக அரசின் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
உ.பி.யில் அதிரடி பிஜேபிக்கு வாக்கு இல்லை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சபதம்
Leave a Comment