மும்பை, மே 11- மகாராட்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப் பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது உபா சிறப்பு நீதிமன்றம்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சச்சின் ஆண்ட்ரே, சரத் கலாஸ்கர் ஆகி யோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலா ரூ.5 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த டாக்டர் வீரேந்திர சிங் தாவ்டே, ஸநாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பாவே, இந்த வழக்கில் ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்ட சில ருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக் குரைஞர் சஞ்சீவ் புனலேகர் ஆகியோரை விடுதலை செய்துள்ளது.
மகாராட்டிர மாநிலம், புனே நகரில் வசித்து வந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதி காலை நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் அடை யாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சிபிஅய் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 20 சாட்சியங் களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், மூடநம்பிக் கைக்கு எதிரான தபோல்கரின் அறப் போராட்டத்தை எதிர்த்ததாக அரசுத் தரப்பு தனது இறுதி வாதங்களில் கூறியி ருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்கட்டத்தில் இந்த வழக்கை புனே காவல்துறை விசாரணை நடத்தியது. பிறகு இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஅய் விசா ரணைக்கு மாற்றப்பட்டது. அப்போது தான், மருத்துவரான வீரேந்திரசிங் தாவடே உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டனர். இவர்தான் இந்தக் கொலை நிகழ்வில் மூளையாக இருந்து செயல் பட்டதாக சிபிஅய் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கில், முதலில், குற்றவாளிகள் என்று சரங் அகோல்கர் மற்றும் வினய் பவாரை சிபிஅய் கைது செய்திருந்தது. பிறகு, சச்சின் ஆண்ட்ரே, சரத் கலாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் கைது செய் யப்பட்டனர்.
தற்போது தாவடே, சச்சின் ஆண்ட்ரே, கலாஸ்கர் ஆகியோர் சிறையில் உள் ளனர். புனலேகர், பாவே ஆகியோர் பிணையில் வெளியே உள்ளனர்.