தமிழ்நாட்டில் உள்ள 2 சுங்கச் சாவடிகளில் மட்டும் சுங்கக் கட்டண வசூலில் 133 கோடி ரூபாய் மோசடி!

1 Min Read

சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது!

புதுடில்லி,செப். 9- ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல்கள், சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மய்யங்களில் பாஸ்ட் டேக் முறைஅமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாககிருஷ்ணகிரி- தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.

இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்திஇருப்பது சி.ஏ.ஜிஅறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி- சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச் சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-  தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக் கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை சி.ஏ.ஜி. கண்டுபிடித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *