கடலூர், செப். 9- கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 1.9.2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை வடலூர் ஜெயப்பிரியா குளிர் சாதன அரங்கில் வைக்கம் நூற் றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ் வாக அறிவார்ந்த கருத்தரங்கமும் பரபரப்பான பகுத்தறிவு பாட்டு மன்றமும் நடைபெற்றன.
மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி தலைமை வகித் தார். மாவட்ட இளை ரணி தலைவர் உதயசங்கர் வரவேற் புரை ஆற்றினார். மாநில இளைஞ ரணி செயலாளர் துணைச் செயலாளர் வேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் மாவட்ட கழக செயலாளர் எழிழேந்தி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் அறிவார்ந்த கவியரங்கம் கவிஞர் எழிலேந்தி, கவிஞர் அன்பன் சிவா, கவிஞர் விடுதலை ஆகி யோர் உணர்ச்சிமிக்க கவிதை களால் சொல் மாரிபொழிந்தனர்.
பகுத்தறிவு பாட்டு மன்றம்!
முனைவர் கலைவாணர் நவ ஜோதி தலைமையில் பகுத்தறிவு பாட்டு மன்றம் தொடங்கியது. தந்தை பெரியாரின் கொள்கை கள் கருத்துக்கள் அதிகம் பேசப் பட்டது. அன்றைய திரைப்படங் களிலா? இன்றைய திரைப்படங் களிலா? எனும் தலைப்பில் பாட்டுமன்றம் நடைபெற்றது. அன்றைய திரைப்படங்களில் தான் என்று கடலூர் தணிகை வேல் – இன்றைய திரைப்படங் களில் தான் கானக் குயில் கவிதா ஆகியோர் நகைச்சுவை ததும்ப சிறப்பான பாடல்களை தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக முன்வைத்து பேசினர். இன்றைய திரைப்படங்களில் தான் தந்தை பெரியாரின் கருத்துக்கள் அதி கம் பேசப்படுகின்றன என்று நடுவர் சிறப்பான தீர்ப்புரை நல்கினார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை ஆற்றினார்.
நிகழ்வில் ஆசிரியர் சூரிய னார்கோயில் மூர்த்தி இசை நிகழ்ச்சியும் மற்றும் அறம் விசுவ நாதன், இரா.பெரியார் செல்வம், கடலூர் சிவக்குமார், சின்ன துரை, மாதவன், பலசக்காடு அரங்கநாதன், புவனகிரி, யாழ்திலீபன், மழவை பெரியார்தாசன், வடலூர் புலவர் ராவணன், கோடையடி குணசேகரன், இடி முழக்கம் இந்திரஜித், பாவேந்தர் விரும்பி, முருகன், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, கட்டியங்குப்பம் மேனாள் ஊராட்சி தலைவர் முத்துலிங்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வெங்க டேசன், செயலாளர் அருணா சலம், மகளிர் அணி பொறுப் பாளர்கள் முனியம்மாள், குணசுந்தரி, சத்தியா, செந்தில் வேல், அறிவுமணி, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன், ராமராஜ், அறிவு, விழுப்புரம் மாவட்ட செயலா ளர் பரணிதரன், புதுவை மாநில தலைவர் சிவ வீரமணி புதுவை மண்டல தலைவர் அன்பரசன், சிவராஜன், தமிழ்ச்செல்வன், ராசா, பழனி, அறிவழகன், கொளத் தூர் பகவான் தாஸ், வேணு கோபால், தனசேகரன், முத்து, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் தமிழ்ச் செல்வன் சிவக்குமார், சக்திவேல், நிர்வாகிகள் தண்டி பள்ளி மாணவன், வேல்முருகன், பாஸ் கர், ஞான சங்கர், கஜேந்திரன், ராஜேந்திரன், செய்தியாளர் சேகர், நாட்டான்மை ஞானசேக ரன், தீனமோகன் வருவாய் சேகர், மறுவாய் திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கழகத் தோழர் கள் ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.