புதுடில்லி, மே 9- தேர்தல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க., மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டிக்கத் தக்கது, வெட்கக்கேடானது என்று மூத்த வழக்குரைஞரும், மாநிலங் களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துடன் ரகசிய உறவு!
இதுகுறித்து கபில் சிபல் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், தேர்தல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க., வினர் மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் தேர்தல் ஆணையம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்று தெரிவித்துள்ளார். மோடி அரசோடும், பா.ஜ.க.,வோடும் தேர்தல் ஆணையம் வைத்து கொண்டுள்ள ரகசிய உறவுதான் இதற்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
பா.ஜ.க.வினர் தேர்தல் விதிமுறை மீறல்!
பா.ஜ.க., வினர் தேர்தல் விதி களை மீறினால், சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை தாக்கீது அனுப்பாமல், அவர்களது கட்சி அலுவலகத்துக்கு மட்டுமே தாக் கீது அனுப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் விதிகளை அப்பட்டமாக மீறி வரும் பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் இதுவரை தாக்கீது அனுப்பாதது ஏன் என்று அவர் வினவியுள்ளார். குறைந்தபட்சம் அவரது கட்சித்தலைமை அலுவ லகத்துக்குக்கூட தாக்கீது அனுப் பப்படவில்லை என்று கபில்சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதுதான் அனைவரது எண்ணம் என்று தெரிவித்துள்ள அவர், நேர்மை தவறிய தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு கண்டிக்கத் தக்கது, வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார்.
விதிமுறைகளை மீறும் பிரதமர்! வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் கபில்சிபல் குற்றச்சாட்டு

Leave a Comment