அரியலூர், மே 9– அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 7.5.2024 செவ்வாய் மாலை 6 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல் லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்
தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையேற்றுதேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது குறித்தும், விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா. அழ கிரிசாமி,தலைமைக்கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வன் மாவட்ட தலைவர் விடுதலை.நீல மேகன் மாவட்ட செயலாளர்
மு.கோபாலகிருஷ்ணன் மாநில ப.க. அமைப்பாளர் தங்க .சிவ மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ்,காப்பாளர் சு. மணி வண்ணன்,மாவட்ட ஒன்றிய நிர் வாகிகள் பொன். செந்தில்குமார் மா.சங்கர், தா.மதியழகன்,
மு.ராஜா, க.செந்தில், தியாக. முருகன், சி.சிவக்கொழுந்து, மு.முத் தமிழ் செல்வன், ராசா. செல்வ குமார், சுந்தரவடிவேலு, ஆட்டோ தர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று விடுதலை சந்தா சேர்த்து அளிக்க உறுதி ஏற்றனர்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் பெருந் தொண்டரும்,கழகம் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் மாநாடுகளில் குடும்பமாக பங்கேற்றவருமான செல்லமுத்து வின் மறைவிற்கும், வீராக்கன் சு.சுரேஷ்,நூற்றாண்டை கடந்த கோவில் பாளையம் அசலம்பாள் ஆகியோரின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதெனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு “குடிஅரசு” நூற்றாண்டு விழாக்களை ஒன்றியந் தோறும் தெருமுனைப் பிரச்சார மாக சிறப்பாக நடத்துவதெனவும், திராவிட இயக்கத்தின் போர்வாள் விடுதலை ஏட்டிற்கு அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 150 விடுதலை சந்தாக்களை சேர்த்து அளிப்பதெனவும் முடிவு செய்யப் பட்டது.