நீட்டிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
விண்ணப்பம்
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தாண்டு இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 56,515 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
கலந்தாய்வு
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அழைப்பு
குறைந்த செலவில் உயர்திறனுடன் சென்னை அய்அய்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மைக்ரோசிப் சாதனத்தை இந்திய தொழில் நிறவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மின் தேவை…
தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் தினசரி மின் தேவை குறையும் வாய்ப்புயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி மின் தேவையை மின் வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல்.
பேருந்துகளில்…
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஅய் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் மின்னணு பயணச் சீட்டு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெறலாம்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment