புவனேஸ்வர், மே 9- ஓடிசாவில் நாடாளுமன்றதேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது இதற்காக ஆளும் பிஜூ ஜனதாதள தலைவரும், முதலமைச் சருமான நவீன் பட்நாயக் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். அவரது நெருங்கிய உதவியாளரும், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியுமான பாண்டியனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதற்கிடையே கஞ்சம் மாவட்டத்தின் கோபால்பூரில் நேற்று (8.5.2024) செய்தியா ளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அவர் கூறுகையில், ‘2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது 120 சட்டமன்ற தொகுதிகளை வெல்வோம் என்பதுதான் பா.ஜனதாவின் முழக்கமாக இருந்தது. 2019-இல் அவர்களது இலக்கு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் 2024-ஆம் ஆண்டுதேர்தலில் 50 அல்லது 60 தொகுதிகளை பெறுவதும். தேர்தலுக்குப் பிறகு பிஜூஜனதாதளத்தை உடைப்பதும் தான் அவர்களது இலக்காக உள்ளது. இது தான் அவர்களது வியூகம்’ எனக்கூறினார்.
பா.ஜனதாவினர் மராட்டியம், கரு நாடகா, மத்திய பிரதேசத்தில் இதைத்தான் செய்திருப்பதாக கூறிய பாண்டியன், அத னால்தான் பிஜூ ஜனதாதளத்தை உடைப் பார்கள் என தான் வெளிப்படையாக கூறுவதாகவும் தெரிவித்தார்.
ஒடிசா தேர்தலில் நவீன் பட்நாயக் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும், பூரிஜெகநாதர் ஆசியுடன் ஜூன் 9-ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவி யேற்பார் என்றும் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி பன்னாட்டளவில் வாபஸ்
புதுடில்லி, மே.9- பக்கவிளைவு கொண் டது என்று தெரிவித்த நிலையில், ‘கோவி ஷீல்டு’ தடுப்பூசியை பன்னாட்டளவில் திரும்பப் பெறுவதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த உயிர்க் கொல்லி தொற்றுநோயான கரோனாவுக் கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி மேற் கொண்டன. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்தன.
அதில் இங்கிலாந்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெறப் பட்டது. இந்த தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கோவிஷீல்டு அய்ரோப்பிய நாடுகளில் அந்த நிறுவனம் தயாரித்த தடுப்பூசி “வாக்ஸ் செவ்ரியா” என்ற பெயரில் சந்தைப்படுத்தப் பட்டது.
இந்தியாவில் சீரம் இன்ஸ் டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தடுப் பூசியை தயாரித்தது. நம் நாட்டில் 220 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது. அதில் கோவிஷீல்டுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தங்களது தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை கொண்டது என்று அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித் தது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தங்களது தடுப்பூசிகளை (கோவிஷில்டு) பன்னாட்டளவில் திரும்பப் பெறுவதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அறிவித்துள்ளது.
தொற்று நோய்க்கு பிறகு கிடைக்கக் கூடிய புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் உபரி காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.