#RunForPeriyar #Periyar145
பெரியாரின் 145ஆவது ஆண்டு விழாவை மாரத்தான் அல்லது பெருநடை மூலம் கொண்டாடுங்கள்.
தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை எங்களுடன் இணைந்து கொண்டாட இந்தச் சிறப்பு மாரத்தானில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
தேதி: செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 17 வரை
நேரம்: உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் ஓட்டத்தை தொடங்கி முடிக்கலாம்.
எங்கு: அருகே உள்ள ஓட்டம் அல்லது நடைக்கு ஏற்ற இடத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் ஓட்டத்தைக் கண்காணிக்கவும், பதிவு செய்யவும் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஃபிட்னஸ் செயலியை பயன்படுத்தவும்.
Strava, Map my run, Charity Miles உள்ளிட்ட மெய்நிகர் ஓட்டத்திற்கான செயலிகள் (virtual run tracking apps) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
ஃபிட்னஸ் செயலியின் திரை சொட்டை(Screenshot) உங்கள் முழுப்பெயர் மற்றும் ஓட்ட வகையுடன் (எ.கா.,5K, 10K, Half Marathon, Walkathon) [email protected]க்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் பங்கேற்பையும், ஆதரவையும் வெளிப்படுத்த உங்கள் ஒளிப்படத்தையும் அனுப்பலாம், அது பெரியார் பன்னாட்டு அமைப்பு இணையதளத்தில் இடம் பெறும்!
ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனிச்சிறப்பு Digital Finisher சான்றிதழைப் பெறுவார்கள்!
பெரியாருக்காக ஓடுவோம்; பெரியார் வழி நடப்போம்; உங்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் உடல் நலனிலும், சமூக நலனிலும் வெளிப்படட்டும்.
– பெரியார் பன்னாட்டமைப்பு
மேலும் விவரங்களுக்கு:
https://periyar145.info/tamil-runforperiyar/
வாட்ஸ் அப்: +17083611998
செல்பேசி : 9940489230