அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரியங்கா அனல் கக்கும் தீவிரப் பிரச்சாரம்

viduthalai
2 Min Read

லக்னோ, மே 8- உத் தரப்பிரதேசத்தில் 7 கட் டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடுகிறது.
இருப்பினும், சோனியா, ராகுல், பிரி யங்கா, மல்லிகார்ஜுன கார்கே என முக்கியத் தலை வர்களின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுகூட நடைபெறவில்லை.
இந்நிலையில் காங்கிர ஸின் 17 தொகுதிகளில் அமேதி மற்றும் ரேபரேலி யில் எப்படியும் வெற்றி பெற அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019 தேர்தலில் அமேதி கைவிட்டுப் போனது.

அமேதியில் அரசியல் தொடங்கி கடந்த 2004 முதல் வெற்றிபெற்று வந்த ராகுல் காந்தியை கடந்த 2019-இல் ஒன்றிய அமைச் சர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.
ராகுல் தற்போது மக்களவை உறுப்பினர் உள்ள கேரளாவின் வய நாடு தொகுதியில் மீண் டும் போட்டியிடுகிறார். இத்துடன், கடைசி நேரத் தில் அவர் ரேபரேலியிலும் மனு தாக்கல் செய்துள் ளார். ரேபரேலியில் சோனியா காந்தி கடந்த 2004 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

இந்த தேர்தலில் அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி மாநிலங் களவை உறுப்பினராகி விட்டார். எனவே, நேரு-காந்தி குடும்பத்தின் வாரி சான ராகுல் அங்கு புதி தாகக் களம் இறங்கி யுள்ளார்.

அமேதியில் நேரு-காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவரான கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். இவர் 1984 முதல் அமேதியில் காங்கிரஸுக்காக தேர்தல் பொறுப்புகளை கவனித்து வந்தார். இந் நிலையில், அமேதி, ரேபரேலியிலும் வெற்றி பெறுவது காங்கிரஸுக்கு சவாலாகிவிட்டது.

எனவே இவ்விரு தொகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித் துள்ளது. இவற்றின் பிரச்சாரப் பொறுப்பு காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா வதேரா விடம் அளிக்கப்பட்டுள் ளது.
5ஆம் கட்ட தேர்தல் மே 18இ-ல்நடைபெறும் நிலையில்இங்கு கடைசி நாள் வரை பிரியங்கா தீவி ரப் பிரச்சாரம் செய்கிறார்.

பிரியங்காவுக்கு உதவ, மேனாள் முதலமைச்சர் களான அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் ஆகி யோரை கட்சியின் தேர் தல் பார்வையாளர்களாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க நியமித்துள்ளார். சோனியாகாந்தி தனது மேற்பார்வையில் ரேபரேலியில் 24 பேர் கொண்ட ஒரு குழுவையும் அமேதியில் 40 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார். இவ் விரு குழுக்களும் பிரியங் காவுக்கு பிரச்சாரத்தில் உதவ உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *