புதுடில்லி, மே 8 நாடு முழுவதும் 93 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடை பெறுகிறது. கடந்த ஏப்ரல்
19-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 102 தொகு திகள், ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 3ஆ-ம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதன்படி அசாமில் 4, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 7, டாமன்-டையூவில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கருநாடகாவில் 14, மத்தியப்பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங் கத்தில் 4 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறு விறுப்பாக நடைபெற்றது. குஜ ராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், டில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய உள் துறை அமைச்சரும் காந்தி நகர் தொகுதி வேட்பாளருமான அமித்ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது மனைவி பிரீத்தி ஆகியோரும் அகமதா பாத்தில் வாக்களித்தனர். குஜ ராத் முதலமைச்சர் பூபேந்திர படேலின் மகன் அனுஜ் படேல் உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்டுள்ளதால், சக்கர நாற் காலியில் வந்து வாக்களித்தார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா எம்எல்ஏ ஆகியோர் ஜாம்நகர் பகுதியில் வாக்களித்தனர்.
மல்லிகார்ஜுன
கார்கே பேட்டி
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி ராதா பாய் ஆகியோர் கர்நாடகாவின் கல்புர்கியில் வாக்களித்தனர்.
பின்னர், செய்தியாளர்களி டம் பேசிய கார்கே, ‘‘கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் செய்த தவறுக்காக இப்போது வருந்துகின்றனர். இந்த முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’’ என்றார்.உத்தர பிர தேச மாநிலம் எட்டாவா பகுதி யில் உள்ள சைஃபை கிராமத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம் பிள் ஆகியோர் வாக்களித்தனர்.
வன்முறை, மோதல்
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் தொகுதிக்கு உட்பட்ட குண்டர்கி, பிலாரி, சந்தவ்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
மேற்கு வங்கத்தில் வாக் குப்பதிவு நடைபெற்ற 4 தொகு திகளின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் மக்க ளவை தொகுதியில் பாஜக சார்பில் தனஞ்செய் கோஷ் போட்டியிடுகிறார். அவர் ஜாங்கிபூரில் உள்ள வாக்குச்சாவ டிக்கு சென்றபோது, அவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண் டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படை வீரர்கள் தலையிட்டு இரு தரப் பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
பீகாரின் சுபால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தேர்தல் அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். பீகாரின்அரரியா பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மாரடைப் பால் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் சர்குஜா பகுதியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த முதியவர், வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் 93 தொகு திகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந் தது. மொத்தம் 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக் குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவாகின.