சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

viduthalai
10 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

 

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கே.கே.பொன்னப்பா, நினைவு மேடை மலைவீதியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப. குமாரசாமி தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் குடிஅரசு நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் புகலூர் தையல் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. மோகன் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் வே ராஜு பொதுக்குழு உறுப்பினர் சே. அன்பு முன்னிலை வகித்தார்.

கழக பேச்சாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன் மற்றும் திண்டுக்கல் இரா.வீரபாண்டியன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் குடிஅரசு இதழ் தொடங்கி இன்று நூற்றாண்டு தொடக்க விழாவையும் நாம் இருபெரும் விழாக்களை சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கழக தோழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் மதவாதத்தை வேரறுத்து, ஒன்றியத்தில் மதச் சார்பின்மை ஆட்சி அமைக்க நாம் அனைவரும் தந்தை பெரியாரின் லட்சியத்தை கனவை நினைவாக்க வேண்டும் என்று பேசினார்கள்.

கூட்டத்தில் விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர் மா. அரியநாயகம், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், தோழர் கா.சண்முகம் சிபிஅய் கரூர் ஒன்றிய செயலாளர், எம்.ராஜேந்திரன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் ஒன்றிய செயலாளர், எம்.குலானன் மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர், தமிழ்மணி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர், புகலூர் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ், இளமாறன் புரட்சிகர இளைஞர் முன்னணி, டி.சி. அக்பர், தலைவர் பகுத்தறிவாளர் கழகம், மார்க்சிஸ்ட் பெரியார் சிந்தனையாளர் கே சண்முகம்,பழனிச்சாமி மற்றும் கரூர் ஒன்றிய செயலாளர் நானா பரப்பு பழனிச்சாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலை வர் இரா. பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், இளைஞர் அணி தோழர்கள் கார்த்தி, விக்னேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட செயலாளர் ம. காளிமுத்து நன்றி உரை யாற்றினார் .

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

துறையூர்

இன்று 6.5.24 திங்கள் மாலை 6.30 மணியளவில் துறையூர் முசிறி பிரிவு ரோடு அருகே திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா… குடிஅரசு பத்திரிக்கை நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் முசிறி ரத்தினம். மாவட்ட இளைஞரணி தலைவர் சு. மகாமுனி மாவட்ட காப்பாளர் பா. ஆல்பர்ட் முன்னிலை வகித்தனர். மு. விஜயேந்திரன் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்

செ. செந்தில் குமார். த. ரஞ்சித். மு. தினேஷ். ரெ. தன்ராஜ். இரா. வரதராஜன். பா. பாரதி. காவியா.பிளாசம்ஸ்டாலின்.சரண் ராஜ்.புலிவலம் கருப்பையா. எஸ். என். புதூர். கருணாகரன். மாராடி ரமேஷ். பெ. பாஸ்கர். மண்ணச்சநல்லூர் நகர செயலா ளர் பாலசந்திரன். ம.இனியன் சம்பத். கோர்ட். இரா. நந்தகுமார். கோர்ட். எம். ஆர். சந்திரபோஸ். கோர்ட். பாலகிருஷ்ணன். வழக்குரைஞர். பால்ராஜ். வழக்குரைஞர். தமிழ்செல்வன்.

இ. கம்யூனிஸ்ட். விஏஒ. செல்வம். சேவுகன்.மக்கள்நீதி மய்யம் அருள்செல்வன். கோபி. ஆசிரியர் முனுசாமி. ஜெயிலர் ராஜேந்திரன். விவசாய தொழிலாளர்கள் சங்கம் பொன்னுசாமி. ஆசிரியர் பிரபு. சே. விஷ்ணு வர்தன்.பி.ஆர்.தேவரா ன். மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த னர். இறுதியில் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.

திருமங்கலம்

தமிழர் தலைவர், தகைசால் தமிழர், ஆசிரியர் கி.வீரமணி ஆணைக்கிணங்க, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா “குடி அரசு” நூற்றாண்டு விழா உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 3.5.2024 அன்று திருமங்கலம் நகர் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் எம். தங்கதுரை தலைமை தாங்கிட, உசிலம்பட்டி மாவட்ட செயலா ளர் பா. முத்துக்கருப்பன் வரவேற்றார்.
தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், உசிலம்பட்டி மாவட்ட தலைவர் த. ம. எரிமலை, மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, மாவட்ட துணைத் தலை வர்அழ. சிங்கராசன், மாவட்ட அமைப்பாளர் ரோ. கணேசன், திருமங்கலம் நகர தலைவர் மு. சண்முகசுந்தரம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் லீ. சுரேஷ், மேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ. பாக்கியலட்சுமி உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர்.

மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் நா.கணேசன் கருத்துரை வழங்கினார். கழக சொற்பொழிவாளர் பொன். அருண்குமார் சிறப்புரையாற்றினார்.
மற்றும் தோழமை கழக பொறுப்பாளர்கள்: மதிமுக நகர தலைவர் ச.அனிதா பால்ராசு, விசிக ஒன்றிய செயலாளர் பா. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி சந்தானம், மக்கள் அதிகாரம் நாகராஜன், மதிமுக திருப்பதி மற்றும் தோழமை கட்சிகளின் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

காவேரிப்பட்டணம்

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு” நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

காவேரிப்பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்தில் சுயமரியாதை சுடரொளிகள் மேனாள் மாவட்டத் தலைவர்கள் தா.திருப்பதி – மு.தியாகராசன் நினைவரங்கத்தில் 4-5-2024 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
ஒன்றிய கழகத் தலைவர் பெ.செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழக மாவட்டச் செயலா ளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிர மணியம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தி.கதிரவன், சி.சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே. புகழேந்தி, மாவட்ட தொழலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பளார் ஊமை. செயராமன் தொடக்கவுரையாற்றினார். அரூர் மாவட்ட ப.க.தலைவர் சா. இராசேந்திரன், கிருட்டினகிரி மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன் ஆகியோர் பேசினர்.
நிறைவாக கழகச் சொற்பொழிவாளர் கோவை க.வீரமணி தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும் “குடிஅரசு” இதழையும் தொடங்கி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து அவர்களது உரிமை முழக்கமாக சுயமயாதை இயக்கமும் குடிஅரசு ஏடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பணிகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இறுதியாக ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.செயலாளர் அ.வெங்கடாசலம், மேனாள் மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞ ரணிதலைவர் சீனி முத்து இராசேசன், இளைஞரணி துணைச் செலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட ப.க.நிர்வாகிகள் மா.சிவசங்கர், மு.வேடியப்பன், ச.முனிராசு, மாவட்ட விவசாய அணிசெயலாளர் ப.தமிழரசு, கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, பர்கூர் ஒன்றியத் தலைவர் மே. மாரப்பன், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், நகர செயலாளர் அ.கோ.இராசா, பையூர் கிளை செயலாளர் சரவணன், மாணவர் கழக பு.மகிழன், பு.முகிலரசி செ.வீரபாண்டி, செ.இளவரசி, பெரியார் பிஞ்சுகள் தி.அ.அனலரசு, தி.அ.அறி வுக்கனல், இரா.திருவரசன், இரா.சஞ்சை உள்பட கழகத் தோழர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

கோவை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு தொடக்க விழா கருத்தரங்கம் கடந்த 3.5.2024 அன்று மாலை 6.00 மணியளவில் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு.ராகுலன், மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்செல்வம்,மாவட்ட துணைச் செயலாளர் தி.க காளி முத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ப.கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழக தலைவர் சின்னச்சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் அக்ரி.நாகராஜ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு தொடக்க உரையாற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சுயமரியாதை இயக்கதின் நூற்றாண்டு கால சாதனைகளை பற்றியும் குடிஅரசு இதழின் புரட்சிகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் சுந்தராபுரம் பகுதி கழக தலைவர் தெ.குமரேசன், செயலாளர் பா.ஜெயக்குமார், கணபதி பகுதி கழக தலைவர் கவி.கிருஷ்ணன் ,பீளமேடு பகுதி செயலாளர் எம்.ரமேஷ், வடவள்ளி பகுதி தலைவர் ஆட்டோ சக்தி, மாநகர அமைப்பாளர் யாழ்.வெங்கடேஷ் , இளைஞரணி தலைவர் இர.சி .பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் திலகமணி, ராஜேஸ்வரி, கவிதா, தேவிகா, ஆடிட்டர் ஆனந்தராஜ், எட்டிமடை.மருதமுத்து, முத்து மாலையப்பன், நாகராஜ், தமிழ்முரசு, பிள்ளையார்புரம் ஆனந்த், இருதயராஜ், ஆவின் சுப்பையா, குறிச்சி குரு, அ.மு.ராஜா, முத்துகிருஷ்ணன், வெற்றிச்செல்வன், மணப்பாறை ராஜா, கோபாலகிருஷ்ணன் , த.க.யாழினி, சே.யாழினி ,சே.கார்முகிலி ஆகியோர் மற்றும் தி.மு.க தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இறுதியாக கணபதி பகுதி கழக செயலாளர் ச.திராவிட மணி நன்றியுரை கூறினார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

பாப்பிரெட்டிப்பட்டி

அரூர் கழக மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 3-5-2024 ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். மாவட்ட மாணவர் கழக செயலாளர் சாய்குமார் அனை வரையும் வரவேற்று பேசினார்.
திமுக மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் சுஜித், சி.பி.எம். கட்சி நகர பொறுப்பாளர் சொக்கலிங்கம், பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மாரி, மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளருமான அரூர் சா.இராஜேந்திரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாநிலக் கலைத்துறை செயலாளரும் திரைப்பட இயக்குநருமான மாரி.கருணாநிதி தொடக்க உரையாற்றி பேசினார்.

குடிஅரசு இதழ் தொடக்கமும், அதில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகளும், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், சுயமரியாதை இயக்கம் தோன்றியதால் மக்களுக்கு மானமும் அறிவும் பெற்றது, கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, பட்டம், பதவி கிடைத்தது. மொத்தத்தில் சுயமரியாதை கிடைத்தது என்று கழக சொற்பொழிவாளர் கோவை க. வீரமணி சிறப்புரையாற்றினார்.
இளைஞரணி பொறுப்பாளர்கள் அய்யனார், சிவானந்தம், பூபேஷ், மோகன் குமார், ஆசிரியர் சிலம்பரசன், தென்றல் பிரியன், சோலை துரைராஜ், ஜீவிதா, பழ.சின்னதுரை, வேப்பிலைப்பட்டி சூர்யா, நாச்சியப்பன், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய கழக செயலாளர் நல்.ராஜா நன்றி கூறினர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒசூர்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா பொதுக்கூட்டம் 5.5.2024அன்று மாலை ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மா.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி தொடக்கவுரையும், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் நோக்கவுரையும், கழக பேச்சாளர் காஞ்சி கதிரவன் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் திமுக மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாநகர சுகாதாரக் குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், காங்கிரஸ் கட்சி மாநகர தலைவர் தியாகராஜன், திராவிடர் இயக்க எழுத் தாளர் பேரா.வணங்காமுடி, சிபிஎம் கட்சி மாநகர செயலா ளர் ஜெயராமன்,சிபிஅய் கட்சி மாநில குழு உறுப்பினர் மாதையன், ஆம்ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் அன்பு செல்வன், தமிழ்தேச குடி அரசு இயக்கம் தமிழரசன், நம் உரிமை மனிதம் வழக்குரைஞர் ராம்குமார், புரட்சிகர தொழி லாளர் முன்னணி மாணிக்கவாசகம்,சமுகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் பிரபாகரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சர்தார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாச்சலம், கழக மாவட்ட துணை தலைவர் ப.முனுசாமி, மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, செயலாளர் கிருபா சின்னசாமி, இளைஞரணிச் செயலாளர் பி.டார்வின்பேரறிவு, மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன், அமைப்பாளர் கி.சி.வாசு, கலைத்துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மாவட்ட துணைச் செய லாளர் ஜெயசந்திரன், பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோபி

5.5.2024 ஞாயிறு மாலை 6. மணியளவில் கோபி பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடி அரசு இதழ் நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுக் குழு உறுப்பினர் பெ.இராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கழகப் பேச்சாளர் கோபி .வெ.குமார ராஜா, தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக கோபி நகர்மன்றத் தலைவரும் – தி.மு.க நகரச் செயலாளருமான என்.ஆர்.நாகராஜன் தொடக்கவுரை யாற்றினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், மாவட்டக்காப்பாளர் இரா.சீனிவாசன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் மா.கந்தசாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி, மாவட்ட ப.க.தலைவர் சீனு. தமிழ் செல்வி, புரட்சிகர இளைஞர் முன்னணி ரமேஷ் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

பொன் முகிலன், ஆ. தன்ராஜ், கே.எம்.மூர்த்தி, மா. சூரியா, சிவபாரதி, சி.மதிவதனி, வழக்குரைஞர் சி. அறிவுச்செல்வி, பெ.கந்தசாமி, சீனு. மதிவாணன், அந்தியூர் கோவிந்தன், சவுமியா, மாநில ப.க. பொறுப்பாளர் அ.குப்புசாமி, க.பழனிச்சாமி, எஸ்.எஸ்.மாணிக்கம், பொ.சாந்தி, க. சீத்தாலட்சுமி, த. விசயசங்கர், ப. நித்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டத்தைக் கேட்டனர். இறுதியாக பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந் தம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *