நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு: ஆள் மாறாட்டம் தொடர்பான புகார்: 50 பேர் கைது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாட்னா, மே 8- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு மோசடியில் ஈடுபடும் நபர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு பாட் னா-வில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்க வைத்து அவர்களுக்கு கேள்வித் தாளை முன்கூட்டியே கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த விடுதியில் அவர்கள் சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்டு ஏற்கெனவே சிறையில் இருக்கும் சிக்கந்தர் யாதவ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தவிர, ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் புதிதாக தேர்வு எழுதும் மாணவர் களுக்காக தேர்வு எழுதி ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறியிருப்ப தாகவும் இது தொடர்பாக விசா ரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பிடம் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் புகார் அளித்திருப் பதாகக் கூறப்படுகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடிந்து மாலை 5:20 மணிக்குப் பிறகே கேள்வித் தாளுடன் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
இருப்பினும் அதற்கு முன் னதாக மாலை 4 மணிக்கே கேள்வித் தாள் ஆன்லைனில் வெளியானதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்தும் விசா ரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *