மழை
தென்னிந்தியப் பகுதிகளில் மேல் வளிமண் டல கீழடுக்குகளில் காற் றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
உயர்வு
சென்னையில் இது வரை இல்லாத வகையில் 4,590 மெகாவாட் மின் தேவை உயர்ந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சபட்ச மின் நுகர்வு 97.77 மில்லியன் யூனிட் டாக பதிவாகியுள்ளது.
ரத்து
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடை முறை அமலுக்கு வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து உள் ளது. தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்த சுற்று லாப் பயணிகள் ரத்து செய்து வருகின்றனர்.
மூடப்பட்டது
கடலில் சீற்றம் தொடர் வதால், குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பய ணிகள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேர் பலியான லெமூர் கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாராட்டு…
கஞ்சா கடத்தல் வழக் கில் கடந்த மூன்று ஆண் டுகளில் வட மாநிலங் களைச் சேர்ந்த 2,486 பேரை கைது செய்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித் துள்ளது.
காய்ச்சல்
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 10 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டதில் ஒருவரின் உடல்நிலை கவ லைக்கிடமாக உள்ளது.