சென்னை, மே 7- பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று (7.5.2024) முதல் வருகிற மே 11ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித் துள்ளது.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல், விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப் படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாக வும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மய்யங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெற ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டண மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலுக்கு விண் ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்
டும்.
அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், எப்போது பதிவிறக்கம் செய்யலாம் என்பது பற்றி ஷ்ஷ்ஷ்.பீரீமீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணைய தளத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.