அமேதி, மே 7– உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம்மீது நேற்று (6.5.2024) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத் தினர். அவர்கள் அங்கிருந்த ஏராள மான கார்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிவிட் டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அமே தியில் உள்ள காங்கிரஸ் அலுவல கத்தில் நேற்று (6.5.2024) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து தாக்குல் நடத்தினர்.
மேலும், தாக்குதல்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12க்கும் மேற்பட்ட கார்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடிவிட் டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த அடையாளம் தெரி யாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, பாஜகவை சேர்ந்த குண்டர்கள் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என காங் கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காரின் கண்ணாடிகள் உடைக் கப்பட்டு அதன் துண்டுகள் தரை யில் சிதறிக் கிடப்பதைக் காட்டும் காட்சிப் பதிவை காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
அமேதியில் ஸ்மிருதி இரானி யின் (பாஜக வேட்பாளர்), தோல்வி பயத்தில் பாஜகவினர் வன்முறை யில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர் பாளழ் சுப்ரியா சிறீனேட் இந்த நிகழ்வை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
’அமேதியில் காங்கிரஸ் அலு வலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட் டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினர் அமைதியான பார்வையாளர் களாக இருந்தனர்.
பாஜகவினர் தங்கள் போக்கிரித் தனத்தை தொடர்ந்தனர். சூழல் மாறிவிட்டது-.
வாகனங்களை உடைப்பது பிரச்சினைக்கு தீர்வு தராது பாஜக மக்களே’ என தெரிவித்துள்ளார்.