படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் ரோகித் வெமுலாவின் ஜாதிபற்றி புலனாய்வு செய்வதுதான் காவல்துறையின் வேலையா?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், மே 7- ரோகித் வெமுலாவின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, ரோகித்தின் ஜாதியைக் கண்டறிவதில் காவல் துறையின் விசாரணைக்குழு கவனம் செலுத்தியது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களின் பங்கு மற்றும் மோதலை உருவாக்கிய ஏ.பி.வி.பி. செயல்பாட் டாளர்களின் பங்கு குறித்து விசாரிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த வழக்கை ஆரம்பத்திலேயே அலட்சியமாக அணுகியது காவல்துறை. பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடப்பதாகக் கூறி நடவடிக்கையை தாமதப்படுத்தியது. 2016 ஜனவரி 17 அன்று, ஜாதி பாகுபாடு காரணமாக ரோகித் வெமுலா அய்தராபாத் பல் கலைக் கழக விடுதி வளாகத்தில் உள்ள விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் மூடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, ரோகித் தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவரல்ல என்றும், பொய்யான ஆவணங்களின் அடிப் படையில் கிடைத்த பலன்கள் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை விவாதத்தை ஏற் படுத்தியதால், தெலங்கானா காவல் துறை தலைவர் மே 3ஆம் தேதி அந்த அறிக்கையை நிராகரித்து, மறு விசா ரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அப்போதைய அய்தரா பாத் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பாராவ், செகந்திராபாத் எம்.பி., பண்டாரு தத்தாத்ரேயா, எம்எல்சி என்.ராம்செந்தர்ராவ், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஏபிவிபி தலைவர்கள்.
ஆனால், அவர்களின் பங்கை விசா ரிக்க காவல்துறை போதிய முயற்சி மேற்கொள்ளவில்லை. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவர் என்கிற நிலையில் ரோகித் வெமுலா வுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.

போராட்டங்களில்தான் அவரது ஆர்வம் இருந்தது என்கிற குற்றச் சாட்டும் கூட காவல்துறையின் அறிக் கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
“எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் ரோகித்தை தற்கொலைக்கு இட்டுச் சென்றது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்கிற வாசகங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, விஷமும் கயிறும் கேட்டு துணை வேந்தருக்கு ரோகித் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் முற்றிலும் புறக் கணித்தனர்.
அந்தக் கடிதத்தை தற்கொலைக்கான காரணமாகக் கருத முடியாது என்றும், எழுதும்போது ஏற்பட்ட விரக்தியும் கோபமும் காலப்போக்கில் மறைந்திருக் கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

‘தனது பிறப்பே மிகப்பெரிய துயரம்’ என தற்கொலைக்குறிப்பில் குறிப்பிட் டிருந்த வார்த்தைகள்மீது காவல்துறை நம்பிக்கை கொண்டிருந்தது, ரோகித் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததையும், விரக்தியில் இருந்ததையும் உறுதிப் படுத்த இந்த வார்த்தைகளை காவல் துறையினர் பயன்படுத்தினர்.
ரோகித்தின் தாயாரை டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆஜராகுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண் டனர்.
2016 ஆம் ஆண்டில், இந்த வழக்கின் முதல் விசாரணையை அய்தராபாத், மதாப்பூர் பிரிவு காவல்துறை உதவி ஆணையர் எம்.ரமணகுமார் நடத்தி னார். பின்னர் ஏசிபி என்.ஷியாம் பிரசாத்ராவ், இறுதியாக ஏசிபி சி.சிறீ காந்த் ஆகியோர் விசாரணை நடத் தினர்.

அறிக்கையின்படி, விசாரணை தொடங்கியதும், பல்கலைக்கழகத்தில் ரோகித் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதனால் இது விசாரணைக்கு உகந்த சூழல் இல்லை என்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், பல்கலைக் கழகத்திற்கு வெளியே உள்ள ஆதாரங் கள் முதலில் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சுயமரியாதையை ஏற் படுத்தும் வகையில் ஜாதி வாரியாக இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் நோக்கில் ரோகித் வெமுலா சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற பிளீனரி கூட் டத்தில் காங்கிரஸ் உறுதியளித்தது.
ஆனால், தெலங்கானாவில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங் களில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தியா ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரசில் சேருமாறு ராதிகா வெமு லாவை ராகுல் காந்தி அழைத்தது குறிப்பிடத்தக்கது.

ஏபிவிபி தலைவரை அடித்ததற்காக விடுதியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட 5 தாழ்த்தப்பட்ட சமூக ஆராய்ச்சி மாணவர்களில் ரோகித்தும் ஒருவர். போராட்டத்தை தொடர்ந்த ரோகித் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மாணவர் மோதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தில், இதே போன்ற எதிர்மறையான கருத்துகள் உள்ளன.
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், ஜாதிவெறியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த புறக்கணிப்புதான் ரோகித்தின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று மாணவர் அமைப்புகள் தெரிவித்தன.
நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கும், ஸ்மிருதி இரா னிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் மூலம் தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. அப்பாராவ்மீது தாழ்ததப்பட்ட, பழங் குடியினருக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணையில்தான் காவல் துறையினர் இறுதி அறிக்கை அளித் தனர். ரோகித் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர் இல்லை என்ற வாதத்தை எழுப்ப ஏற்கெனவே முயன்றனர்.
அது தவறு என மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலம் நிரூபித்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *