தமிழ்தான் உலக மொழிகளில் முதன்மையான மொழி! சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழி என்பது புனைச்சுருட்டு என மொழி ஆய்வு செய்து சான்றுகளோடு வெளியிட்ட ராபர்ட்கார்டுவெல் பிறந்தநாள் இன்று.
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம்’ எனும் நூல் மூலம். திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ். “தென்னிந்திய மொழிகள் இந்தோ-அய்ரோப்பிய மொழிக்கு நேரெதிர் தன்மை கொண்டவை, வடமொழி சொற்களை தமிழில் இருந்து எடுத்தாலும், தங்குதடையின்றி தனித்து இயங்கும் தமிழ்” என்றார் ராபர்ட் கார்டுவெல்
திருநெல்வேலியில் சமயப்பணி ஆற்ற வந்த அவர் தமிழ் மக்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி முதலிய வற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முழுவதும் நடந்தே சென்றார். இடையன்குடியில் தங்கி இருந்த போது தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல் லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் போன்ற நூல்களைக் கற்றார். தன்னை ஏற்றுக் கொண்ட திருநெல்வேலி மக்களுக்கு நன்றி செலுத்த விரும் பிய அவர், மாவட்ட வரலாறை ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டார். ’திருநெல்வேலி சரித்திரம்’ எனும் பெயரில் படைக்கப்பட்ட நூல், போர்த்துக்கீசிய, டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ செய்த முயற்சிகளை துல்லியமாக பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்த போது உள்ளூர் தமிழர்களின் பல்வேறு பகுதிகளில் பேச்சு உச்சரிப்பு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 1856இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு திராவிட மொழிக்குடும்பம் என்றும், சமஸ்கிருத மொழிக் குடும்பத் திற்கு இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் என்றும் மொத்தம் 4 மொழிக்குடும்பம் இந்தியாவில் இருக்கிறது என மொழியியல் அறிஞர்களை உறுதிப்படுத்தி எழுதினார்.
கால்டுவெல் மொழியியலைப் (philology) படித்தவர். கல்லூரிப்படிப்பு, ஆராய்ச்சி பட்டம் எல்லாமே மொழி களைப் பற்றித் தான். அதனால் அவருக்கு கிரேக்கம், ரோமா னியம், ஜெர்மன் போன்ற மொழிகள் எல்லாம் நன்றாக தெரியும். இந்தியாவிற்கு வரும்போது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்கிறார். இதன் பின்பான ஆராய்ச்சியின் விளைவாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலை எழுதினார்.
அதன் முதல் பதிப்பில் 12 திராவிட மொழிகள் குறித்து எழுதினார்.இரண்டாவது பதிப்பில் மேலும் தமிழ் மற்றும் அதன் கிளை மொழிகளை விரிவாக ஆய்வு செய்து எழுதுகையில் 15 மொழிகள் இருக்கிறது என எழுதிவெளியிட்டார்.
ராபர்ட் கார்டுவெல் தன்னைப் பற்றி கூறும் போது:
“நான் அயர்லாந்தில் பிறந்தேன், ஸ்காட்லாந்தில் வளர்ந் தேன், ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன் என்றாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடும் தமிழ் மக்களுமே என் கருத்தை முழுமையாக கவர்ந்ததால் நான் அவர்களில் ஒருவரானேன்” என்றார்.
இத்தகைய அருள் தொண்டாற்றிய அறிஞரைக் காவி கள் – அவர் பிறப்பால் கிறித்தவர் என்பதால் இழிமொழி கூறித் தூற்றித் திரிகின்றன.