உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி பிரச்சாரம்

1 Min Read

லக்னோ, மே 7 உ.பி.யில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ) இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி 62, காங்கிரஸ் 17 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி இந்தமுறை இந்தியா கூட்டணியின் உறுப்பினராகி விட்ட தால் உ.பி.யில் போட்டியிடவில்லை. மாறாக அக்கட்சி சமாஜ்வாதி மற்றும் காங்கிர ஸுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளது.

டில்லியில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் உ.பி.யிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர் விந்த் கெஜ்ரிவால், வாராணசியில் என்டிஏவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். இதன் முடிவில் பாஜகவின் மோடிக்கு 5,81,022 (56.37%) வாக்குகள் கிடைத்தன. அடுத்து வந்த கெஜ்ரிவால் 2,09,238 (20.30%) வாக்குகளை பெற்றார். உ.பி.யின் பிற தொகுதிகளில் பெரும்பா லானவற்றில் ஆம் ஆத்மி டெபாசிட் தொகையையும் இழக்க நேரிட்டது.
இதேபோன்ற நிலை ஆம் ஆத்மிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, அக்கட்சி 2019 தேர்தலில்

டில்லி மற்றும் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் போட்டியிடவில்லை. எனினும், 2022 உ.பி. சட் டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆம் ஆத்மி 380 தொகுதிகளில் போட்டியிட்டது. இதி லும் அக்கட்சி எந்த தொகுதியையும் பெறவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் தொகையையும் இழந்தது. தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இண்டியா கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இருப் பினும், கூட்டணியின் சக உறுப்பினர் களுக்காக ஆம் ஆத்மி கட்சி உ.பி.யில் பிரச்சாரம் செய்ய உள்ளது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங் தலைமையில் முக்கியத் தலைவர்கள் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *