சென்னை, மே 6-கோடை வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடும் கோடையின் அதிகபட்ச வெப்பக் காலம் மே 28 வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித் தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப் பிருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்த வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா 1 செ.மீ. கோடை மழை பெய்துள் ளது.
அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழ் நாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதேபோல, மே 7 அன்று நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப் புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.