அமராவதி, மே 6-தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந் திராவில் மக்களவை தேர்த லுடன் சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக மே 23 அன்று நடைபெறுகிறது.
இங்கு காங்கிரஸ் – இடது சாரிக் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக – தெலுங்கு தேசம் – ஜனசேனா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி என ஆந்திராவில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அர சியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு
இந்நிலையில், பல்வேறு பிரச் சினைகளால் ஆந்திராவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குத்து வெட்டு ஆரம்பித்துள்ளது. 300 பெண்களை பாலியல் வன் குற்றங்களுக்கு உள்ளாக்கிய ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன் முறை விவகாரம், பிரதமர் மோடியின் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சு, இஸ்லாமியர்க ளுக்கான இடஒதுக்கீடு ரத்து என்று மோடி, அமித்ஷா கூறி யதாக டிரெண்டிங்கில் இருக்கும் காணொலி உள்ளிட்டவைக ளால் ஆந்திர பாஜக கூட்ட ணியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
குறிப்பாக பிரதமர் மோடி யின் இஸ்லாமியர்களுக்கு எதி ரான வெறுப்புப் பிரச்சாரத்திற்கு தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகி யோர் மோடி மற்றும் அமித் ஷாவின் வெறுப்புப் பேச்சிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் மனநிலையில் இருந்தாலும், தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் கூட இல்லாத காரணத் தினால் பாஜக மீதான அதிருப் தியை வெளிக்காட்டாமல் உள் ளதாக தகவல் வெளியாகியுள் ளது.
இத்தகைய சூழலில் கடந்த மே 1 அன்று ஆந்திர தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர் தல் அறிக் கையை தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு – ஜனசேனா தலைவரும் நடிகரு மான பவன் கல்யாண் ஆகியோர் வெளியிட்ட னர்.
இந்த தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி படம் இடம் பெற வில்லை. சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
மேலும் பாஜகவின் இஸ்லா மியர்களுக்கு எதிரான பேச்சுக்கு பதிலடி கொடுப்பது போல, ஆந்திராவில் தெலுங்குதேசம் – ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைத்தால் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டில் கை வைக்க மாட் டோம் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியாலும், மோடி படம் இடம் பெறாமல் இருப்பதாலும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங் கேற்ற பாஜக மேலிடப் பார்வை யாளர் சித்தார்த் நாத் சிங், தேர்தல் அறிக்கையை கையில் பிடித்து ஒளிப்படத்திற்கு நிற் பதற்கு மறுத்துவிட்டார்.
இது தேர்தல் அறிக்கை விழா அரங்கில் பெரிய சர்ச்சை நிகழ் வாக அரங்கேறியது. முக்கியமாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பாஜகவினர் உடன் இருப்பதை தெலுங்கு தேசம் – ஜனசேனா தொண்டர் கள் விரும்பாமல், பாஜகவினரை புறக் கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளால் ஆந்திராவில் பாஜக கூட்டணி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிதறலாம் என தகவல் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இந்து மக்கள் 85 சதவீத அளவிலும், முஸ்லிம் மக்கள் 13 சதவீத அளவிலும் வாழ்ந்து வருகின் றனர்.
1955 முதல் 2024 வரை 69 ஆண்டுகளில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் ஆகிய கட்சிகள் ஆந்திராவை ஆட்சி செய்துள்ளன. இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் போன்றே ஆந்திரா விலும் இந்து – முஸ்லிம் மக்களி டையே வகுப்புவாத வன்முறை நிகழ்வு அங்கு வெடித்தது இல்லை. சட்டம் ஒழுங்கில் ஓரளவு அமைதியான மாநில மாக ஆந்திரா உள்ள நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினரின் வகுப் புவாத கருத்திற்கு ஒட்டுமொத்த ஆந்திர மக்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனை அறிந்ததாலும், சுமார் 1 கோடி அளவிலான முஸ்லிம் மக்களின் வாக்குகள் இருப்பதாலும் பாஜகவின் வகுப் புவாத பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல தெலுங்கு தேசம் – ஜனசேனா கட்சிகள் நடந்து கொள்கின்றன. எனினும் ஆந்தி ராவில் “இந்தியா” கூட்டணி அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரசே ஆதிக்கம் செலுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.