6.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா பிரச் சினை தேர்தலில் பாஜகவை கருநாடகாவில் பின்னடைவை சந்திக்க வைக்கும் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
தி டெலிகிராப்:
♦ பிரதமர் மோடிக்கு பிடித்த ஹிந்தி வார்த்தைகள்: பாகிஸ்தான், இந்து-முசல்மான், மந்திர்-மஸ்ஜித், மங்கள சூத்ரா ஆகியவை பிரதமருக்கு மிகவும் பிடித்த, வார்த் தைகள். இந்து பெண்கள்), கை-பைன்கள் (பசு-எருமை); பிடிக்காதவை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பண வீக்கம் போன்றவை என லாலு பிரசாத் கிண்டல்.
♦ வெறுப்புப் பேச்சுக்காக நரேந்திர மோடி மீது நட வடிக்கை எடுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் காளீஸ்வரம் ராஜ் கடிதம் எழுதியுள்ளார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ 2021இல் திமுக ஆட்சி அமைத்த பிறகு, தமிழ்நாட்டில் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும், ஏனெனில் அவர்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
– குடந்தை கருணா