சென்னை,மே.6- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப் பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 முடிவுகள்
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள்.
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்பு, தொழில் நுட்ப படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, சட்டப் படிப்பு, கால்நடை மருத்துவப் படிப்பு, சித்த மருத்துவ படிப்பு என பல்வேறு உயர்கல்விகளை தேர்வு செய்வர்.
அரசு கல்லூரியில் சேர…
உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங் கள் உள்ளன.
இதற்கான 2024-2025ஆம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
இதுதொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குநர் நேற்று (5.5.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன. விண்ணப்பிக்க விரும் புவோர் www.tngasa.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண் ணப்பிக்க இயலாத மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மய்யங்கள் மூலம் விண் ணப்பிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.48-ம், பதிவு கட்டணமாக ரூ.2-ம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்ட ணம் ஏதும் கிடையாது. பதிவு கட்டணம் ரூ.2 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண் ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, விண்ணப்ப தாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மய்யங்களில்,‘The Director, Directorate Of Collegiate Education, Chennai-15′ என்ற பெயரில் மே 6-ஆம் தேதி (இன்று) அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமா கவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்ட மற்றும் கால அட்டணையை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-24343106, 044-24342911 என்ற எண்களுக்கு தொடர்பு கொள் ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கும் நிலை யில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் விரை வில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.