பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாணவிகள் 96.44 சதவீதம்-மாணவர்கள் 92.37 சதவீதம் தேர்ச்சி

viduthalai
1 Min Read

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது!
94.56 சதவிகிதம் தேர்ச்சி!
மாணவிகள் 96.44 சதவீதம்-மாணவர்கள் 92.37 சதவீதம் தேர்ச்சி

சென்னை, மே 6 பிளஸ் டூ தேர்வில் 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள் ளனர்.
செய்தி விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாண வர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத் தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில், ஏற்கெனவே அறி வித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று (6-5-2024) காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக் குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர் களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள் ளனர்.
தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *