வல்லம். செப்.10 – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் செயல்பட்டு வரும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம், சமூகப்பணித்துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் சார்பாக ஒருநாள் கிராமப் பயணம், பெரியார் புரா கிராமமான திருமலைசமுத்திர கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி அவர்கள் தலைமையேற்று வாழ்த்தி வழியனுப்பினார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மனிதநேய, மேலாண்மை மற்றும் அறிவியல் துறை முதன்மையர் முனைவர் பொ.விஜயலெட்சுமி, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் மற்றும் சமூகப்பணிதுறை தலைவர் முனைவர் சு.பரமேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூகப் பணித்துறை மாணவர்கர்களும், பேரா சிரியர்களும் அரசு பொது பேருந்தில் மக்களோடு இணைந்து பயணித்து திருமலை சமுத்திரத்திரம் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு ஒவ்வொரு மாணவரும், கிராமத்தில் வசிக்கும் மக்களை தனித் தனியாக சந்தித்து அவர்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகள், தூய்மையான குடிநீர், நீரழிவு நோய், உடற்பயிற்சி, யோகா, உணவு அட்டவணை, ஆரோக் கியமான உணவு வகைகள், நெகிழி, மாசுபாடு, சுகாதரரம் மற்றும் நிலை யான வளர்ச்சி இலக்குகள் (SDG) ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த கலந்துரையாடல் மூலம் மாணவர்கள் கிராமிய வாழ்வு, அவர்கள் மேற்கொள்ளும் பணிகள், சந்திக்கும் இடையூறுகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை அறிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பய னுள்ளதாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் போது கிராமப்புற வளர்ச்சிக்கு தேவையான அரசு நலத் திட்டங்கள் குறித்தும், சுற்றுப்புற பாது காப்பு குறித்தும், சுத்தம் மற்றும் சுகா தார நல்வாழ்வு குறித்தும் மாணவர்கள் மக்களுக்கு விளக்கினார்.
இறுதியாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அப்பகுதியில் பயிரிடப்படும் பயிர்கள் விவசாயம் குறித்தும் அதனை சந்தைப்படுத்தும் முறைப்பற்றியும் உரையாடி அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூகப்பணித்துறையில் பயிலும் 22 முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் கிராமப்புற பயண நிகழ்வை சமூகப் பணித்துறை உதவி பேராசிரியர் முனை வர் சூ.ஞானராஜ் மற்றும் மாணவ மன நல ஆலோசகர் திருமதி. த.அலமேலு ஆகியோர் ஒருங் கிணைத்து வழி நடத்தினர்.