மும்பை, மே 5- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அதானிகுழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு செபி தாக்கீது அனுப்பியுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்துள்ளதாகவும், பங்குகளின்விலையை அதிகரிக்க பல மோசடிகளை செய்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வுநிறுவனம்அறிக்கை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து, சிறப்பு விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம், அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனங் களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க செபிக்கு உத்தர விட்டிருந்தது. அதன் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த செபி, தற்போது பங்குச்சந்தைமுறைகேடு தொடர்பாக அதானி குழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
அதானிபோர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. முறையற்ற பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச் சந்தை விதிகளுக்கு இணங்காமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டது தொடர்பாக இந்த தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஊழல் அதானி குழும நிறுவனங்களுக்கு செபி தாக்கீது
Leave a Comment