அகமதாபாத், மே5- மக்களவை தேர்த லில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத் தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
அவர் அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து விமர் சித்த பிரதமர் மோடி, “கடந்த 2019 தேர்தலில் அமேதியில் தோல்விய டைந்ததால், இந்த முறை இள வரசர்(ராகுல் காந்தி) ரேபரேலிக்கு தப்பிவிட்டார்” என்று கூறியிருந் தார். இந்த நிலையில், ‘பிரதமர் மோடி மாளிகைகளில் வாழ்பவர்’ என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“பிரதமர் மோடி ராகுல் காந் தியை ‘இளவரசர்’ என்று விமர்சிக் கிறார். எனது சகோதரர் ராகுல் காந்தி 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆனால் ‘பேரரசர்’ நரேந்திர மோடி மாளிகைகளில் வசித்து வருகிறார். அவருக்கு விவ சாயிகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து எப்படி தெரியும்?
பிரதமர் மோடி அதிகாரத்தால் சூழப்பட்டுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர். யாரும் அவரி டம் எதுவும் சொல்வது கிடையாது. யாராவது குரல் எழுப்பினால், அவர்களது குரல் நசுக்கப்படும். குஜராத் மக்கள் பிரதமர் மோடிக்கு மரியாதையும், அதிகாரமும் வழங் கினார்கள். ஆனால் அவர் எப்போ தும் மிகப்பெரிய மனிதர்களுடன் மட்டுமே இருக்கிறார். அவர் விவ சாயிகளிடம் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? விவசாயி கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரி ழந்தனர். ஆனால் பிரதமர் அவர் களை நேரில் சென்று பார்க்கவேயில்லை. தேர்தல் வரும்போது வாக்குகளை பெறுவதற்காக சட் டங்களை மாற்றுகிறார்.” இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.