கந்தர்வகோட்டை மே 5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளை தலைவர் ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார். நெல்லு பட்டு இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு தலைமை வகித்து வட்டாரச் செயலாளர் ரஹ்மத்துல்லா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் குறித்து பேசிய தாவது:
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) புதுச்சேரியில் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.
இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய கவிக்குயில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர அடையாளங்களில் மிக முக்கியமானவர் என்றால் அதை மறுப்பதற்கில்லை.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார் என்று பேசினார். இந்நிகழ்வில் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் ரம்யா, லாவண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்
Leave a Comment