புதுடில்லி, மே 5 மக்களவைத் தேர்தலின் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மொத்தம் பதிவான வாக்குகளின் எண் ணிக்கையை வெளியிடாதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குப் பதிவு சதவிகிதம் குறித்து முதலில் வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும் இறுதியாக வெளியிட்ட புள்ளிவிவரத்திற்கும் இடையே திடீரென 6 சதவிகிதம் அளவிற்கு வித்தியாசம் ஏற்பட் டது எப்படி? என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் யெச்சூரி குறிப் பிட்டுள் ளார். தலைமை தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமாருக்கு எழுதியுள்ள கடி தத்தில் சீத்தாராம் யெச்சூரி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
இறுதிப் புள்ளிவிவரத்திற்கு 11 நாள் ஆகுமா?
மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தின்போது அளிக்கப் பட்ட வாக்கு சதவீதத்தின் இறுதிப் புள்ளி விவரம் வாக்குப் பதிவு நடைபெற்று 11 நாட்கள் கழிந்த பின்னர் தாமதமாக வெளியிடப்பட்டிருப்பதும், அதற்கான காரணத்தை விளக்கிடாததும் உண்மையில் ஆச்சரியமாக இருக் கிறது. அதேபோன்றே இரண் டாம் கட்டத் தேர்தல் முடிந்த பின்னரும் நான்கு நாட்கள் தாமதமாக வாக் குப்பதிவு குறித்த புள்ளிவிவரம் வெளியாகி இருக் கிறது. இந்த அசாதாரணமான தாமதத்திற்கு உரிய காரணம் என்ன என்பது குறித்து, எவ்வித மான விளக்கத்தையும் அளித்திட தலைமைத் தேர்தல் ஆணையம் முன்வராதது வாய்ப்பு கேடான தாகும்.
ஆறு சதவிகித வாக்குகள் வித்தியாசம் அசாதாரணமானது
தலைமைத் தேர்தல் ஆணை யம் ஆரம்பத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், இப்போது இறுதியாக வெளியிட்டுள்ள புள்ளிவிவ ரத்திற்கும் இடையே எப்படி ஆறு சதவிகிதம் அதி கரித் தது என்பதற்கான விளக்கம் எதுவும் கூறப்படவில்லை. ஆரம் பத்தில் கூறப்பட்ட புள்ளி விவ ரத்திற்கும், இறுதியாகக் கூறப் பட் டுள்ள புள்ளிவிவரத்திற்கும் இடையே சிறிய அளவில் வித்தி யாசங்கள் இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஆறு சதவிகித வித்தி யாசம் என்பது அசாதா ரண மானதாக இருக்கிறது. இது சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மேலும், பதிவான வாக்கு களின் சதவிகிதங்கள் வெளியிடப்பட்டுள்ள அதே சமயத் தில், பதிவான வாக்குகளின் எண் ணிக்கை விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. தேர்தல் செயல்முறையின் வெளிப் படைத்தன்மை மற்றும் நம்பகத் தன்மையின் நலன் களுக்காக, இது தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தலைமைத் தேர் தல் ஆணை யம் தெளிவுபடுத்துவது அதன் கட மையாகும்.
மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும் மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரி யாகவும், மக்கள் அளித்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆரம் பத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் சதவிகிதமும், இறுதியாக எடுக் கப்பட்ட புள்ளி விவரத்தின் சத விகிதமும் அளிக்கப்பட வேண் டும். தனித்தனியாக கணக்கு காட்டியாக வேண்டும் இதே போல் பதிவாகியுள்ள வாக்குகள் குறித்த எண்ணிக்கையும் அளிக் கப்பட வேண்டும். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரம், அஞ்சல் வாக்குகள், பணியில் உள்ள ஊழியர்கள் வாக்களிக்கும் மய்யங்களில் பதிவான வாக் குகள் என ஒவ்வொரு இடத் திலும் இந்த உயர்வு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டியதும் அவசியமாகும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.