மக்களவை 3ஆம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

viduthalai
2 Min Read

குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

புதுடில்லி, மே 5 மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று (5.5.2024) பிரச்சாரம் ஓய் கிறது. குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் (7.5.2024) ஓட்டுப் பதிவு நடக்கிறது.
நாட்டின் 18ஆவது மக் களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப். 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நடை பெற்றது. அதேபோல் 2ஆம் கட்ட தேர்தல் ஏப். 26ஆம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் தேர் தல் நடைபெற இருந்தது. ஆனால் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய் யப்பட்டன. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 8 சுயேட்சை வேட்பாளர்கள் திரும்பப் பெற்றதால் சூரத் பா.ஜ வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதனால் குஜராத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதே சமயம் மத்திய பிரதேசத்தின் பெத் துல் மக்களவைத் தொகுதி யில் ஏப். 26ஆம் தேதி தேர் தல் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் இத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால் இங்கு தேர்தல் வரும் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த 94 தொகுதிகளிலும் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. அங்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. 3ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 94 தொகுதிகளில் 1,351 வேட் பாளர்கள் போட்டியிடு கின்றனர். முக்கியமாக ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய அமைச் சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, மேனாள் முதலமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், திக் விஜய்சிங், காங்கிரஸ் கட்சி யின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இதற்கிடையே 4ஆம் கட்ட தேர்தலில் 1,717 பேர் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 13ஆம் தேதி 4ஆம் கட்ட மாக 96 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *