சென்னை, மே. 4- ஆதரவின்றி உயிருக்கு போராடிய முதியோரை மீட்ட கூடுதல் துணை காவல்துறை கண் காணிப்பாளர் உள்பட காவல் துறையினரை மனித உரிமை ஆணையம் கவுரவித்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக் கரை பகுதியில் ஆதரவின்றி உயிருக்கு போராடி கொண் டிருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஜெக நாதன் (வயது 70) என்ற முதியவரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஹரிகுமார் தலைமையில் கும்மிடிப் பூண்டி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி, குகாவல்துறை ஆய்வாளர் வடி வேல் முருகன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், காவலர் ராஜேஷ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி மீட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மனித உரிமை ஆணைய உறுப்பினர் வீ.கண்ணதாசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ஆணையத் தின் புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், காவல்துறை துணை கண்காணிப் பாளர் சுந்தரேசன் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.எனினும் முதியவர் ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி 2 வாரங்களுக்கு முன்பு இறந்து போனார்.
காவல்துறையினருக்கு சான்றிதழ்
முதியோர் உயிருக்கு போராடும் தகவல் கிடைத்த 15 நிமிடங்களில் காவல்துறையினர் அவரை மீட்டி ருந்தனர். அவ ரது உடலில் இருந்த புண் மற்றும் துர்நாற்றத்தை காவல் துறையினர் போக்கி இருந்தனர். எனவே காவல்துறையினரின் மனிதநேய பணியை பாராட்டும் விதமாக தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் சார்பில் அவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஆணை யத்தின் நீதிபதி ராஜ இளங்கோ தலைமை தாங்கினார். உறுப்பினர் வி.கண்ணதாசன், செயலாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண் காணிப்பாளர் ஹரிகுமார் உள்பட காவல்துறையினர் மற்றும் ஆணை யத்தின் புலனாய்வு பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ் வரன். துணை கண்காணிப்பாளர் சுந்தரேஷ் ஆகியோருக்கு நீதிபதி ராஜஇளங்கோ பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.’
நீதிபதி பாராட்டு
விழாவில் நீதிபதி ராஜஇளங்கோ பேசும்போது. மனித உரிமை மீறல் களை கண்டிப்பது, தண்டிப்பது மட் டுமல்லாமல், மனிதநேயத்து டன் பணியாற்றுபவர்களை பாராட்டி அவர்களை பெருமைப் படுத்தவேண்டும் என்ற நோக்கத் தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.காவல்துறையினரை ஒருவிதமான எதிர்மறை விளைவுகளோடு பார்க் கிற போக்கு மாறி. அவர்களும் மனித உரிமைகளை போற்றுவதற் காக தங்களை ஈடுபடுத்தி கொள்கி றார்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது?’ என்றார்.
மனித உரிமை மீறல் நிகழ்வுக ளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு அபராதம், தண்டனை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மனித உரிமை ஆணையம் முதல் முறையாக காவல்துறையினரின் மனிதநேய பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.