திருப்புல்லாணி, மே 4- நகைகளைக் கோயில் ஸ்தானிகர் திருடியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், நகைகள் காணாமல்போன காலங்கள் குறித்துப் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.
திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் கோயிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல்போன விவகாரத்தில், காவல்துறை விசாரணை ஆமை வேகத்தில் நடப்பதாகவும், இந்து அமைப்புகள் இந்த விவகாரத்தில் பட்டும் படாமல் இருப்பதாகவும் ஆதங்கப்படுகின்றனர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள்!
ராமநாதபுரம் அருகே திருப் புல்லாணியில் அமைந்திருக்கிறது, 108 வைணவத் தலங்களில் ஒன்றான ஆதி ஜெகந்நாத பெருமாள் கோயில்.
அற நிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த வர்கள் பரம்பரை அறங்காவலர்களாக இருந்துவருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் கோயிலில் இருக்கும் ஆபரணப் பெட்டியை சோதனை செய்தபோது, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம், முத்து, நவரத்தினக் கற்கள் பதித்த நகைகள் காணாமல்போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகைப் பொறுப்பாளரான ஸ்தானிகர் சீனிவாச அய்யங்கார் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோயில் ஊழி யர்கள், மேனாள் – இந்நாள் திவான் களிடமும் ஒரு மாதமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆனாலும், மந்தமான விசாரணையால், வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.