ராகுல் காந்தி உ.பி. ரேபரேலியிலும் போட்டி

2 Min Read

புதுடில்லி, மே 4 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நேற்று (3.5.2024) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது தாய்சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா வதேரா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உ.பி.யில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றன. இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடு கின்றன. 15 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை அறிவித்த காங்கிரஸ் 2 தொகுதி களுக்கு மட்டும் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.

இவை, காங்கிரஸ் செல்வாக்கு மிஞ்சியிருக்கும் தொகுதிகளாகக் கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி ஆகும். இதுவரை 17 மக்களவைத் தேர்தலை ரேபரேலி சந்தித்துள்ளது. இதில் 14 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இங்கு 2004 முதல் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்த சோனியா காந்தி, தனது உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அருகில் உள்ள அமேதி தொகுதி இதுவரை 16 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2004 முதல் இங்கிருந்து ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வி அடைந் தார். அதேசமயம், 2ஆ-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அங்கு வென்றார். தற்போது மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார்.

அமேதியில்
அமேதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிஷோரி லால் கர்மா(63) காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர். முதல் முறையாக தேர்தலில் போட் டியிடும் சர்மா, லூதியானாவை சேர்ந் தவர். காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா கவுலின் உறவினரான இவர், ராஜீவ்காந்திக்காக 1984இல் ரேப ரேலியில் தேர்தல் பணியை தொடங் கினார். பிறகு கேப்டன் சதீஸ் சர்மாவின் தேர்தல் பிரதிநிதியாகவும் இருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *