கல்லக்குறிச்சி, மே 4- 3.5.2024அன்று மாலை ஆறுமணிக்கு கல்லக் குறிச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் கலந்துறவாடல் கூட் டம் மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலு வலகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
கழககாப்பாளர் ம.சுப்பரா யன் தலைமை வகித்தார். திரா விடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மகத் தான பேருழைப்பை, அறிவா சான் தந்தை பெரியாரை உலக றியச் செய் திட்டஅறிவாற்றலை விளக்கியும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடு தலை எனும் போராயுதத்தால் இன எதிரிகளையும், துரோகிகளை யும் வெற்றிகண்ட வரலாற் றினை விளக்கியும் உரையாற் றினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர், மாநில மருத்துவ ரணி, செயலாளர் கோ.சா. குமார், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, நகரதிராவிடர் கழகத்தலைவர் இரா.முத்துசாமி, மாவட்ட ப.க.தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட ப.க.அமைப்பாளர்சி.முருகன், மேலூர் தலைவர் ஆ. பழனிமுத்து, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரின் பொறுப்பா ளர் மாயக்கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கியதுடன் ஒவ் வொருவரும் அய்ந்து சந்தாக் கள் திரட்டித்தர உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்றனர்.
கூட்டத்தில் பெரியார் பெருந் தொண்டர் எடுத்தவாய்நத்தம் த.பெரியசாமி மறைவுக்கு இரங் கல், வீரவணக்கம் தெரிவிக்கப் பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி 100 விடுதலை சந்தாக்கள் சேரத் தளிப்பது என முடிவு செய்யப் பட்டது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டத்தை மே.5இல் கல்லக்குறிச்சியிலும், மே.7இல் சங்கராபுரத்திலும் நடத் து வது என தீர்மானிக்கப்பட்டது.