அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரின் காணொலி தகவல்
அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் அகில்பாரதிய பரபாத் கட்சி வேட்பாளர் கண்ணீர் மல்க நாட்டுமக்களுக்கு வெளி யிட்ட சமூகவலை தளச் செய்தி வருமாறு:
அமித்ஷாவிற்கு எதிராக அகில பாரதிய பரபாத் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜித்தேதிர சவுகான் என்பவர் கடைசியாக வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில் கூறியதாவது:-
‘‘நான் அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடுவதாக செய்தி வெளியானதில் இருந்தே எனக்கு தொடர் மிரட்டல்கள் வரு கிறது. முதலில் எனக்கு பணம் கொடுக்க முயன்றனர்.
ஆனால், நான் மறுத்துவிட்டேன். பின்னர் பரப்புரைக்குச் சென்ற போது என்னை தாக்க முயன்றனர். காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் பயனில்லை.
இந்த நிலையில் என்னை கடத்த முயற்சி நடக்கிறது. நான் கொலை செய்யப்படுவேன் என்று எனது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னை அச்சப்பட வைக்கிறது. இதுதான் எனது கடைசிப் பதிவு என்று நினைக்கிறேன்
நாட்டைக் காப்பாற்ற நீங்கள் அனைவரும் முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் நாம் அனைவரும் சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிக் கொண்டு சாலையில் நடக்கக் கூட அனுமதி பெறவேண்டிய கொடிய சூழல் ஏற்படும், நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். இது கடந்த மாதம் அவரே பதிவு செய்த இந்தக் காணொலி தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது இவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர்.