அமித்ஷாவை எதிர்த்துப் போட்டியிடுபவர்களை
வேட்பு மனுவைத் திரும்பப் பெற வைத்த அவலம்!
காந்திநகர், மே 4 அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இதில் சுயேச்சையாக களமிறங்கிய ஜிதேந் திர சவுகான் என்பவர் அமித்ஷாவின் ஆட்கள் தன்னை கடத்தி மிரட்டியதை அடுத்து தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜிதேந்திர சவுகான் உட்பட 3 வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை 16 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகவும், அதில் சுயேச்சைகள் தவிர நான்கு பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
போட்டியில் இருந்து விலக, தனக்குப் பணம் வழங்குவதாக காவல்துறை உதவியுடன் பாஜகவினர் தன்னை மிரட்டியபோதும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பணம் எதுவும் வாங்காமல் போட்டியில் இருந்து விலகியதாக ஜிதேந்திர சவுகான் தெரிவித்துள்ளார்.
ராஜபுத்திரர்கள் பிரச்சினை!
குறிப்பாக ராஜபுத்திரர்கள் மற்றும் படேல் கள் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். மேலும் பட்டியலின சமூகத்தினரும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். காந்திநகரின் பாஜகவின் வெற்றி – தோல்வி அங்குள்ள பட்டியலின சமூக மக்களின் கைகளில்தான் உள்ளது. அதில் சிறிய அளவு வாக்குகள் சிதறினாலும் அமித்ஷா தோல்வி உறுதியாகிவிடும்.
இதனால் தனக்கு எதிராக யாருமே நிற்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்து அனைத்து வேட்பாளர்களையும் திரும்பப்பெற வைத் துள்ளார்.
தற்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி அகாடியா கட்சி மற்றும் குஜராத் தொழிலாளர்கள் கட்சி என்ற 4 கட்சிகள் மட்டுமே போட்டியில் இருக்கின்றன. இதிலும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி எப்போதும் தனது வேட்புமனுவை திரும்பப்பெறலாம் என்று பேச்சு எழுகிறது.
நழுவும் பகுஜன் சமாஜ்
காரணம் காந்தி நகரில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தனக்குத் தேர்தலில் செலவழிக்க பணம் இல்லை என் றும், உடல் நிலையும் மோசமாகி வருகிறது என்றும் உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ளார். இதனால் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் அமித்ஷாவிற்கு எதிராகக் களத்தில் நிற்கவில்லை என்பது புரிகிறது.
காங்கிரஸ் மற்றும் குஜராத் தொழிலாளர் கட்சியினரையும் அங்குள்ள பாஜக தொண் டர்கள் பரப்புரை செய்யவிடாமல் மிரட்டல் விட்டு வருகின்றனர். இது தொடர்பாக காங் கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
காந்தி நகர் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றிபெற்ற போதும் மே 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் இருந்து 16 பேர் விலகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சூரத்தில் நடந்தது என்ன?
ஏற்கெனவே சூரத் தொகுதியில் வேட்பாளர் கள் அனைவரும் போட்டியில் இருந்து வில கியதை அடுத்து, அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் மத்தியப் பிரதேசம் இந்தூரி லும் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நிமிடத்தில் மனுவை திரும்பப்பெற்று பாஜகவில் இணைந்து விட்டார். மேலும் காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்புமனு தாக்கல் செய்த நபரும் திரும்பபெற்றுவிட்டார், இதனால் மே 7 ஆம் தேதிக்குள் பாஜகவிற்கு எதிராக களத்தில் நிற்கும் அனைத்து சுயேச்சைகளையும் திரும் பப்பெறவைக்க மிரட்டல்கள், அழுத்தங்கள் தொடர்கின்றன.
அதே போல் மத்தியப்பிரதேசத்தில் உள்ள கஜுரகோ மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் மீரா யாதவின் வேட்புமனுவையும் தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்ததால் அங்கும் பாஜக போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பி.ஜே.பி. இன்னும் எவற்றையெல்லாம் செய் யுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தோல்வி பயம் அவர்களைத் துரத்துகிறது என்பதும் புரிகிறது.