11.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉நாட்டின் பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்து மதத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: பிரான்சில் ராகுல் கடும் தாக்கு
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 2024இல் தேர்தல் வெற்றிக்காக, 2002இல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பாஜக நடத்தியது போல், தற்போதும் பாஜக நடத்த முயலும், என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉மாட்டிறைச்சி உண்பதால் இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது என்று கூறிய அய்.அய்.டி. மண்டி இயக்குநர் மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉அதிகாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை, திமுகவுக்கு சித்தாந்தமே முக்கியம். ஏற்கனவே பெரியார், பி.ஆர்.அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்கள் பேசியதை தான் சொன்னேன் என உதயநிதி ஸ்டாலின் மீண்டும் பேச்சு.
தி இந்து:
👉ஜி-20 மாநாட்டில் மதம் மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மை பற்றி பேசும் பிரதமர் மோடி உள் நாட்டில் மணிப்பூர் கலவரம் பற்றி பேச மறுக்கிறார் என ஜெய்ராம் ரமேஷ் சாடல்.
– குடந்தை கருணா