சமூகவலைத்தளங்களிலும் சரிகிறது மோடியின் செல்வாக்கு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, மே 3- பாஜகவை ஆட்சி அதிகா ரத்தில் இருந்து அகற்ற 26க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணிக்கு நாடு முழு வதும் பிரமாண்ட ஆதரவு கிடைத்து வருகிறது.
“கோடி மீடியா” கருத்துக் கணிப்புக்களை தவிர்த்து, மற்ற பெரும் பாலான ஊடகங்கள் “இந்தியா” கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தகவல் தெரிவித்து வரு கின்றன. தோல்வி பயத்தால் பிரதமர் மோடி இந்து -_ முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சையும் கக்கி வருகிறார். இதனால் பாஜக 200 தொகுதிகளை கடப்பதே சிரமம் என தகவல் வெளி யாகியுள்ள நிலையில், சமூகவலைத் தளங்களிலும் மோடியின் செல்வாக்கு மிக மோசமான அளவில் சரிந்து வருகிறது.

மோடி தனது பிரதமர் சார்ந்த நிர்வாகப்பணிகளை விட சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். வெளிநாட்டுப் பயணம், அரசு விழாக்கள் மட்டுமின்றி நடைப் பயிற்சி, கடலில் குளித்தல் என அனைத்து நிகழ்வுகளின் புகைப் படம், காட்சிப் பதிவு (வீடியோ)களை உடனுக்கு டன் டுவிட்டர் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல்களில் பதிவிட்டு விடுவார். இதற்காகவே தான் எங்கு சென்றாலும் தனக்கு பாதுகாப்பு வரும் எஸ்பிஜி வீரர்களை விட கேமராமேன் களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுப்பார்.
இந்தியாவில் விளையாட்டுப் பிரிவுக்கு பிறகு அதிக விருப்பங்கள் பெறும் சமூக வலைதள கணக்கு என்றால் அது மோடி என்று ஊட கங்கள் பெருமையாக செய்தி வெளியிட்ட சம்பவங்களும் அரங்கேறிய காலம் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது.

ராகுல் காந்திக்கு அமோக ஆதரவு
கடந்த காலங்களில் பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் (போஸ்ட் பக்கம்) சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் விருப்பங் கள் (லைக்ஸ்) கிடைக்கும். சில பதிவுகள் லட்சக்கணக்கான விருப் பங்களை கடந்துள்ளன. பிரதமர் பதிவிடும் நேரடி வீடியோ காட்சித் தொகுப்பை நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் காண்பது வழக்கம். ஆனால் இப்பொழுது நூற்றுக் கணக்கில் என்று கூறும் அளவிற்கு சுருங்கி விட்டது. இதன்மூலம் சமூக வலைத் தளங்களில் பிரதமர் மோடியின் செல்வாக்கு மிகமோசமான அள வில் சரிவை கண்டு வருவது தற் போது பிரதமர் மோடி பதிவிடும் ஒவ்வொரு பக்கத்திற்கும் சராசரி யாக 4 ஆயிரம் விருப்பங்கள் மட் டுமே கிடைக்கிறது. சில பக்கங்க ளுக்கு 3,000 விருப்பங்கள் கிடைப் பதே சிரமமாக உள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சியினரின் பதிவுகளுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக ராகுல் காந்தியின் ஒவ்வொரு பதி வுக்கும் சராசரியாக 70 ஆயிரம் விருப் பத்தை பெற்று வருகிறது. அநேகமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிரான பதிவுகள் லட்சக்கணக்கில் விருப்பங் களையும், கருத்துக் களையும் பெற்று கலக்கி வருகிறது. மக்கள் மத்தியில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பாஜகவிற்கு எதிரான அலை தீவிர மடைந்துள்ள நிலையில், என்ன செய் வது என்பது புரியாமல் பாஜக கதி கலங்கி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *