பிரஜ்வல்லை கைது செய்க: கருநாடக பெண்கள் ஆவேசம்!

2 Min Read

பெங்களூரு, மே 3- கருநாடகாவில் முக்கிய பிராந்திய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் தலைவ ரும், மேனாள் பிரதமருமான தேவகவுடாவின் மூத்த மகனும், ஜே.டி.எஸ்.எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா (ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பி). இவர் கரு நாடகாவில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியின் பா.ஜ.க. கூட்டணி வேட் பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட்டும், வேலைக்கான ஆணை வழங்க உதவுமாறும் வந்த பெண் களை மயக்கியும், அதிகாரத்தை வைத்து மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டுடன், “பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக் கிரங்கள்” என்ற பெயரில் ஏப்ரல் 25 அன்று 300 ஆபாச வீடி யோக்கள் கருநாடக மாநிலத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப்களில் வைரலானது. கருநாடகாவில் முதல்கட்ட தேர்தல் தொடங்க ஒருநாளுக்கு முன்னர் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் வெளியான நிலையில், பா.ஜ.க.-ஜே.டி.எஸ். கூட்டணி அதிர்ச்சி யில் உறைந்தனர்.

அடுத்த 48 மணி நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் 2800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் நாடு முழுவதும் பரவியது.
இதனையடுத்து ஹாசன் தொகுதி வேட்பாளரான பிரஜ் வல் ரேவண்ணா தலைமறைவா னார். தற்போது அவர் அய் ரோப்பா நாடான ஜெர்மனியில் இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில், மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது கரு நாடக அரசு. மேலும் புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணாமீது நரசிபூரா காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பெண்கள் போராட்டம்
இந்நிலையில், பல பெண் களின் வாழ்க்கையை சீரழித்த ஜே.டி.எஸ்.எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி கருநாடக மாநிலம் முழுவதும் பெண்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர், மகளிர் அமைப் பினரும் இணைந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் தங் களது கண்டனத்தை வெளிப் படுத்தியுள்ளனர்.

பா.ஜ.க. பாதுகாக்கிறது
பாலியல் குற்றவாளி பிரஜ் வல் ரேவண்ணாவை பா.ஜ.க. பாதுகாப்பதாக கருநாடக பெண்கள் மற்றும்குழந்தைகள் நலத் துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குற்றம் சாட்டி யுள்ளார்.

நழுவும் பா.ஜ.க.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் முன் கூட்டியே தெரியும் என்றும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநி லத் தலைவர் பி.ஒய்.விஜயேந் திராவுக்கு கடிதம் எழுதியும், பா.ஜ.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *