புதுடில்லி, ஏப். 3- இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியா மல் தேர்தல் பிரச்சாரங்க ளில், பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார் என மேனாள் ஒன்றிய அமைச் சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 3ஆவது கட்ட தேர்தல், மே 7ஆம்தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி, வடமாநிலங்க ளில் அனல்பறக்கும் பிரச் சாரம் நடைபெற்று வரு கிறது.
இந்த தேர்தலில் ஆட் சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலை மையிலான என்டிஏ கூட்டணியில் போராடி வரும் நிலையில், ஆட் சியை கைப்பற்ற காங்கி ரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அதீத முயற்சிகளை எடுத்து வருகிறது. தேர்தல் கார ணமாக, பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் என பல தரப்பினரும் அதிரடி பிர சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங் கிரஸ் கட்சியை கடுமை யாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி, காங்கி ரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு இருக்காது என்று பேசியிருந்தார், மேலும் மதரீதியிலான இடஒதுக்கீடு கொண்டு வரமாட்டோம் என உறுதி தருமா என வும் கேள்வி எழுப்பியிருந் தார்.
இதற்கு பதில் தெரிவித்து, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை, மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்றார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்பு அல்லது வாக் குறுதி எதுவும் இல்லை. இந்தியாக் கூட்டணியி லும் இல்லை. மோடி நீண்ட காலம் வாழட்டும்!
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக் கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங் கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என் றார். மோடி வரலாற்றை மறந்துவிட்டார். தேர்தல் பரப்புரைகளில் இட ஒதுக்கீடு குறித்து வர லாறு தெரியாமல் பேசி உளறி வருகிறார். அரச மைப்பு சட்டப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது என மோடிக்கு தெரியவில்லை. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவின ருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் ஓபிசிக் கான இடஒதுக்கீடு அறி முகப் படுத்தப்பட்டது மற்றும் ஒன்றிய அரசு வேலைகள் மற்றும் ஒன் றிய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நரசிம்மராவ் மற்றும் டாக்டர் மன் மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அர சாங்கங்களால் செயல் படுத்தப் பட்டது.இந்த வரலாறு அவருக்கு தெரிய வில்லை. 2014 முதல் பாஜக அளித்த வாக்குறுதி அனைத்தும் பண மின்றி திரும்பிய காசோலை போன்றது” என்று விமர் சித்துள்ளார்.