புதுடில்லி, மே 3- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் குக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங் உ.பி கைசர்கன்ஜ் தொகு தியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி யுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கைசர்கன்ஜ் தொகுதியின் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங். இவர் இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவராக இருந்தார்.
அப்போது இவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் தெரிவித்து போராட்டத் தில் குதித்தனர். இதனால் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவர் மீது டில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.
பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கியதால், பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை தேர்தலில் போட் டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால், அவருக்கு பதி லாக அவரது மகன் கரன் பூஷன் சிங் கைசர்கன்ஜ் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்து உள்ளது.
பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் மகனுக்கு பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு
Leave a Comment