என்யுபிசி (National Union of Backward Classes) அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் 28.4.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் இதுநாள் வரை பொதுச் செயலாளராக இருந்த திருமதி எஸ்.கீதா அவர்கள் தேசியத் தலைவராகவும், ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.சுவர்ணகுமார் தேசிய செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற செயற்குழு உறுப்பினர்களும் நியமனம் பெற்றனர். இதனை தேசிய பொதுச் செயலாளர் எஸ்.டி.சுப்பிரமணியம் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார். மண்டல் குழுவின் பரிந்துரையினை நடைமுறைப்படுத்திட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட டில்லியின் முதலாவது முதலமைச்சரும் சமூகநீதிப் போராளியுமான சவுத்ரி பிரம்பிரகாஷ் அவர்களால் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஒன்றியம் நிறுவப்பட்டதாகும். தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் எஸ்.கீதா அவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சமூகநீதிப் போராளி சவுத்ரி பிரம்பிரகாஷ் நிறுவிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல் ஜாதி, பழங்குடி வகுப்பினர், சிறுபான்மையினருக்கான தேசிய ஒன்றியம்
Leave a Comment