புதுடில்லி,மே3- உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்க நிர் வாகிகள் குழுவில் மகளி ருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று (2.5.2024) உத்தரவு பிறப் பித்தது.
இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநா தன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப் பில் கூறியதாவது:
உச்சநீதிமன்ற வழக்கு ரைஞர் சங்கம் ஓர் முன் னணி அமைப்பாக திகழ் வதோடு, உச்சநீதிமன்றத் தின் ஒருங்கிணைந்த பகு தியாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பின் விதிகள், தகுதிக்கான நிபந்தனைகள், உறுப்பி னர், உறுப்பினருக்கான கட்டண நடைமுறைகள் பல ஆண்டுகளாக மாற்ற மின்றி நிலையாக இருக் கக் கூடாது. காலத்துக் கேற்ப அதில் மாற்றங் களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, வழக்குரைஞர் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு அமல்படுத் தப்பட வேண்டும்.
சங்கத்தின் நிர்வாகி கள் குழுவில் மூன்றில் ஒரு பங்கு இடம் மகளி ருக்கு ஒதுக்கப்பட வேண் டும். அதாவது நிர்வாகி கள் குழுவில் இடம்பெற் றுள்ள 9 இடங்களில் மூன்று இடங்கள் மகளி ருக்கு ஒதுக்கப்பட வேண் டும். மேலும், 6 முதுநிலை நிர்வாக உறுப்பினர் பதவியில் 2 இடங்களும், அலுவலர் பொறுப்பில் குறைந்தது ஓரிடமும் மக ளிருக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.
நடைபெற இருக்கும் 2024-2025 வழக்குரைஞர் சங்கத் தேர்தலில், பொரு ளாளர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத் தர விட்டனர்.
உச்சநீதிமன்ற வழக்கு ரைஞர் சங்க தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடை பெறுகிறது. மே 18-ஆம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டு, மே 19-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.