சோதனை
விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்கு வரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மரியாதை…
இரண்டாம் உலகப் போரின்போது ரயில்பாதை கட்டுமானப் பணியில் இறந்த தமிழர்களின் நினைவை போற்றும் வகையில், தாய்லாந்தின் காஞ்சனபுரியில் நடுகல் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
தொல்லியல்…
புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளக்கூடாது என தொல்லியல துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை…
கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்று அடையாளப்படுத்தியதாக எழுந்த குற்றச் சாட்டை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தானியங்கி…
தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டில் 180 புதிய தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி
நாடு முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திட புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய ஆன்லைன் பாடங்களை அனைத்து மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அனுப்பி உள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment