புதுடில்லி, மே 2- கருநாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,499 கோடியை வழங்கி உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கருநாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கடு மையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
சுமார் 48 லட்சம் எக்டேர் பரப்பளவில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 223 தாலு காக்கள் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஒன் றியக் குழு கருநாடகாவில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் அறிக் கையை தாக்கல் செய்தது.
இந்த சூழலில் வேளாண் சாகு படிபாதிப்பை ஈடுகட்ட ரூ.35,162 கோடி,தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கருநாடக அரசு கேட்டது.
இதுதொடர்பாக கருநாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந் தது.
அப்போது ஒன்றிய அரசு சார் பில் ஆஜரான அட்டர்னி ஜென ரல் வெங்கட ரமணி கூறும்போது, ‘‘கருநாடகாவுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. விரை வில் வறட்சி நிதி வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
இதன்படி சில நாட்களுக்கு முன்பு கருநாடகாவுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,499 கோடியை ஒன்றிய அரசு வழங் கியது.
இந்த சூழலில் உச்ச நீதி மன் றத்தில் 29.4.2024 அன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கருநாடக அரசு சார் பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஒன்றியக் குழு கருநாடகாவில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப் பித்தது.
அந்த அறிக்கை விவரம் என்ன என்பது தெரியவில்லை. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தர விட வேண்டும்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க கருநாடக அரசு கோரியது.
ஆனால் ஒன்றிய அரசு ரூ.3,499 கோடியை மட்டுமே வழங்கியிருக்கிறது.
கருநாடக அரசு கோரியதைவிட குறைவான தொகையை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார்.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறும்போது:
“ஒன்றிய அரசு சார்பில் கரு நாடகாவுக்கு முதல்கட்டமாக ரூ.3,499 கோடி வறட்சி நிதி வழங் கப்பட்டு உள்ளது.
கருநாடகாவில் ஆய்வு செய்த ஒன்றிய குழு வழங்கிய பரிந் துரைகள் அமல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒன்றிய குழு வின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
வழக் கின் அடுத்த விசாரணை மே 6ஆ-ம் தேதிக்கு ஒத்தி வைக் கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க கருநாடக அரசு கோரியது குறிப்பிடத்தக்கது.