கொல்கத்தா, மே 2- பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது என முதலமைச்சர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “மேற்கு வங்க மக்களின் எண்ண ஓட்டமும் பாஜகவினரின் எண்ண ஓட்டமும் முற்றிலும் மாறுபட்டவை. எனவே, பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது.
நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், டில்லியிலிருந்து புலம்பெயர்ந்த பறவைகள் (பாஜக தலைவர்கள்) இதற்கு நேர்மாறாக உள்ளதுடன் மேற்கு வங்கம் குறித்து பொய்களை பரப்பி வரு கின்றன” என பதிவிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பேசும் போது, “சமூக நல திட்டங்களுக்கு நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. மேற்குவங்கத்தில் சதி செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும் அவர்களுடைய தலைவிதியை முடிவு செய்யவும் ஒரு வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும். மேற்கு வங்கம் இந்த நாட்டுக்கு வழிகாட்டும்” என்றார்.
வங்கத்தில் பாஜக ஜம்பம் பலிக்காது: மம்தா உறுதி

Leave a Comment