ஆண்டவன் காப்பாற்றவில்லையே! ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற எழுவர் விபத்தில் உயிரிழப்பு

2 Min Read

அரசியல்

திருப்பத்தூர்,செப்.12- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிரா மத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த 8-ஆம் தேதி கருநாடகா மாநிலம் தர்மஸ் தலாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும் பிக் கொண்டிருந்தனர். 

பேரணாம்பட்டைச் சேர்ந்த சதீஷ்குமார்(42) ஓட்டிய வேன், திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளியை அடுத்த சண்டியூர் என்ற இடத்தில் நேற்று (11.9.2023) அதி காலை 2 மணியளவில் வந்த போது முன்சக்கரம் காற்று இறங்கியது. சாலையின் நடுவில் அமைந்த தடுப்பு அருகில் வேனை நிறுத்திய ஓட் டுநர் டயரை கழற்றி மாட் டும் பணியில் ஈடுபட்டார். 

வேனில் பயணித்த மீரா(50), தெய்வானை(32), சேட்டம்மாள்(55), தேவகி(50), சாவித்திரி(45), கலாவதி(50), கீதாஞ்சலி(32) ஆகிய 7 பெண்கள் கீழே இறங்கி வேன் பக்கவாட்டில் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேனிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னை யில் இருந்து பெங்களூரு வுக்கு லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, பழுதாகி நின்ற சுற்றுலா வேன் மீது பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில், வேன் முன்பக்கமாக நகர்ந்து தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 7 பெண் கள் மீது கவிழ்ந்ததில் 7 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தனர்.

வேனில் உறங்கிக் கொண்டிருந்த பேரணாம் பட்டு திரு.வி.க. நகரைச் சேர்ந்த சத்யா(33), வைஷ் ணவி (28), சியமளா(50), தனஞ்ஜெயன்(50), சண்முகம், பானுமதி, வேன் ஓட்டுநர் சதீஷ் குமார் மற்றும் லாரி ஓட் டுநரான அருணாச்சலம், லாரியில் பயணித்த ஜார்க்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த சிவதூரி, ஒடிசாவைச் சேர்ந்தரவி ஆகிய 10 பேர் காயம டைந்தனர்.

விபத்து தகவலறிந்த திருப்பத்தூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பா ளர் புஷ்பராஜ், வாணியம் பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி னர். காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டனர். வாணி யம்பாடி அரசு மருத் துவமனைக்கு 3 உடல்களும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 4 உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

அமைச்சர் எ.வ.வேலு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரி ழந்தவர்களின் உடல் களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தார். உயிரி ழந்தவர்களின் உடல்கள்  உடற் கூராய்விற்குப் பிறகு நேற்று மாலை உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டன.

பிரதமர் இரங்கல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.

முதலமைச்சர் நிவாரணம்: உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரை மாவட்ட ஆட் சியர் கே.எம்.சரயு சந்தித்து ஆறுதல் கூறினார்.முதல மைச்சர் அறிவித்த தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங் கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *