புதுடில்லி, ஏப்.30- இரண்டா வது கட்ட வாக்குப்பதிவும் பா.ஜனதாவை கைவிட்டதால் விரக்தி யில் இருக்கும் பிரதமர் மோடி அச்சத்தை தூண்டு கிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
விரக்தி
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘எக்ஸ்’ வலைத் தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இரண்டாவது கட்ட தேர் தலும் பா.ஜனதாவை கைவிட்டு விட்டது. அதனால் விரக்தி அடைந்துள்ள பிரதமர் மோடி, கருநாடகாவில் பிரச்சாரத்துக்கு செல்கிறார்.
பொய் சொல்லுவது, அச் சத்தை தூண்டுவது ஆகிய காரியங் களில் அவர் ஈடுபட்டு வருகி றார். அதை தவிர்த்து, கீழ் கண்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்பாரா?
நாடாளுமன்ற ஆய்வறிக் கையின்படி, கருநாடகத்தை சேர்ந்த பா.ஜனதா நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வில்லை. நாடாளுமன்ற வரு கையின் தேசிய சராசரி 79 சதவீதம்.
ஆனால், கருநாடகாவை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப் பினர்களின் சராசரி வருகை 71 சதவீதமாக இருந்தது.
அவர்களில் 26 பேர், கரு நாடக பிரச்சினைகளை எழுப் பியதே இல்லை 5 ஆண்டுகளில், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கேள்விகூட கேட்டது இல்லை.
5 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஒரு விவாதத்தில்கூட பங்கேற்றது இல்லை. 14 நாடா ளுமன்ற உறுப்பினர்கள், தங் கள் தொகுதியில் வகுப்பு கல வரத்தை தூண்டுவதில் நேரடி யாகவோ, மறைமுகமா கவோ சம்பந்தப்பட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது.இத்தகைய திறமையற்ற நாடாளுமன்ற உறுப்பினர் களை திணித்ததற்காக கருநா டக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புகேட்பாரா?
கருநாடக மக்கள் மீது பழிவாங்கும் உணர்வு
கருநாடகாவில் கடுமை யான வறட்சி நிலவுகிறது. பேரிடர் நிவாரண விதிமுறை களின்படி, கருநாடக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ரூ.18 ஆயிரம் கோடி நிதி கேட்டது. ஒன்றிய குழு பார்வையிட்ட ஒரு மாதத்துக்குள் நிதி வழங்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், 7 மாதங்கள் கழித்து, அதுவும் ரூ.3 ஆயி ரத்து 498 கோடி மட்டும் அனு மதித்துள்ளது. இது, கருநாடக அரசு கேட்ட நிதியில் வெறும் 20 சதவீதத்துக்கும் குறைவு ஆகும். ஏன்,கருநாடக மக்களி டம் பிரதமர் மோடி பார பட்சமாக நடந்து கொள்கி றார்?.
கருநாடக மக்கள் மீது ஏன் பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறார்? அவர் தனது மவு னத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டும். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.