அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,ஏப்.30- நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்ச லால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சினை குறிப்பாக டில்லி, ஃபரிதாபாத், கொல்கத்தா, மும்பை, பெங் களூரு நகரங்களில் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனாவுக்கு இருக்கும் அனைத்து அறிகுறிகளும் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கும் இருப்பதால், இது கரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா அல்லது கரோனாவே சீசன் நோயாக மாறியிருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காரணமாக என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், நாட்டில் இதுவரை அபாய நிலைக்கு எதுவும் செல்லவில்லை என்றும், கரோனா வைரஸ் பல கட்ட திரிபுகளை அடைந்து, தற்போது ஒமைக்ரானின் துணைப் பிரிவுதான் தற்போது நாட்டில் பரவி வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எந்தவிதமான கரோனா தீநுண்மி பரவி வரு கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இதுவரை காய்ச்சல் பாதித்தவர்களில் யாருக்கும் உடல்நிலை மோசமடைவதோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக் கப்படும் நிலையோ ஏற்படுவில்லை. ஆனால், நாடு முழுவதும் ஏற்கனவே பரவிக் கொண்டி ருக்கும் வைரஸ்களுடன் தற்போது கரோனா வைரஸ் இணைந்து, சளி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்கின்றன சுகாதாரத் துறை.

டில்லியில் ஒரு சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அவை அபாய நிலை யில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான அறிகுறி இருப்பவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிடு கிறார்கள். சிலருக்கு சோதனை செய்யும்போது அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப் படுகிறது. எனவே, மிகச் சரியான கரோனா நோயாளிகள் எண் ணிக்கையை தெரிவிக்க முடியவில்லை என்கின்றன டில்லி மருத்துவமனை வட்டாரங்கள். தற்போதைக்கு வாரத்துக்கு 2 முதல் மூன்று நோயாளிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குணமடைய 2 முதல் 3 வாரங்கள் ஆவ தாகவும் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *